Virat Kohli: காத்திருந்து காத்திருந்து காலங்கள் ஓடுதம்மா.. ! 100 போட்டிகளில் 100 அடிக்காத விராட் கோலி..
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து மோசமான பேட்டிங் ஃபார்மில் உள்ளார்.
15ஆவது ஐபிஎல் தொடரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான விராட் கோலி தொடர்ந்து சொதப்பி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் 41,12,5,48,1,12,0 என ரன்களை அடித்துள்ளார். மேலும் நேற்று நடைபெற்ற லக்னோவிற்கு எதிரான போட்டியில் அவர் ரன் எதுவும் எடுக்காமல் கோல்டன் டக் அவுட்டாகினார்.
இந்நிலையில் விராட் கோலி தற்போது வரை 100 கிரிக்கெட் போட்டிகளில் சதம் எதுவும் அடிக்காமல் விளையாடியுள்ளார். அதாவது அவர் கடைசியாக சர்வதேச சதம் அடித்த பிறகு சுமார் 17 டெஸ்ட், 21 ஒருநாள்,25 டி20 மற்றும் 37 ஐபிஎல் போட்டிகள் என மொத்தமாக 100 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தப் போட்டிகள் எவற்றிலும் அவர் சதம் அடிக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி சதம் அடித்து சுமார் 900 நாட்களுக்கு மேலாகியுள்ளது.
Virat Kohli has now gone 100 matches across all formats without a century - 17 Tests, 21 ODIs, 25 T20Is and 37 IPL games. #IPL2022
— Mazher Arshad (@MazherArshad) April 19, 2022
விராட் கோலியின் இந்த மோசமான ஃபார்ம் தொடர்ந்து இந்திய அணிக்கு சிக்கலாகியுள்ளது. ஏனென்றால் இந்தாண்டு டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அந்தத் தொடருக்கு முன்பாக விராட் கோலி மீண்டும் ஃபார்மிற்கு திரும்ப வேண்டும் என்று பலரும் ஏக்கத்துடன் உள்ளனர். அதற்கு அவர் நடப்பு ஐபிஎல் தொடரை நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பலர் தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடருக்கு பின்பு தென்னாப்பிரிக்கா டி20 தொடர் மற்றும் அயர்லாந்து டி20 தொடர் உள்ளது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியும் உள்ளது. இந்தத் தொடர்களுக்கு முன்பாக விராட் கோலி ஃபார்மிற்கு வருவாரா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்