Suresh Raina Reaction: சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜா நியமனம் - முன்னாள் வீரர் ரெய்னா குயிக் ரியாக்ஷன்...!
சென்னை அணியின் அடுத்த கேப்டனாக கடந்தாண்டில் எதிர்பார்க்கப்பட்ட ரெய்னா, ஜடேஜாவுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டதற்கு அந்த அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து கூறியுள்ளார்.
இன்று கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பாக, சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியது. புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டது. சிஎஸ்கே அணியின் இந்த அறிவிப்பு இன்றையா ஹாட் டாப்பிகாக சமூகவலைதளங்களில் இருக்கிறது. பலர் தோனியின் முடிவை ஏற்க மனமில்லாமல் தங்களின் சோகத்தையும், ஆதங்கத்தையும் கொட்டி வருகின்றனர். அதேநேரத்தில், ஜடேஜாவுக்கும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை அணியின் அடுத்த கேப்டனாக கடந்தாண்டில் எதிர்பார்க்கப்பட்ட ரெய்னா, ஜடேஜாவுக்கு வாழ்த்து கூறியுள்ளார். “என் சகோதரனுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கியது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் இருவரும் வளர்ந்து வந்த ஒரு அணியின் தலைமையை ஏற்க அவரை விட நான் யாரையும் நினைக்கவில்லை. ஜடேஜாவுக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இது ஒரு உற்சாகமான கட்டம், எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் அன்பிற்கும் ஏற்ப நீங்கள் வாழ்வீர்கள் என்று நான் நம்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
Absolutely thrilled for my brother. I can't think of anyone better to take over the reins of a franchise we both had grown up in. All the best @imjadeja . It's an exciting phase and I'm sure you will live up to all the expectations and love #yellow #csk #WhistlePodu
— Suresh Raina🇮🇳 (@ImRaina) March 24, 2022
கடந்த 2012 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அங்கமாக இருந்து வரும் ஜடேஜா, சிஎஸ்கேயை வழிநடத்தும் மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதேபோல், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, தோனி வீரராக மட்டுமே களமிறங்குவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தும் 2வது முழுநேர கேப்டன் என்ற பெருமை ஜடேஜாவுக்கு கிடைத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்