Watch Video: மகளிர் பிரிமீயர் லீக்கின் பெண்கள் தின கொண்டாட்டம்..! தீம் பாடல் வீடியோ வெளியிட்டு கொண்டாட்டம்..!
மகளிர் பிரீமியர் லீக் சமூக வலைதளப் பக்கத்தில் மகளிர் தின வாழ்த்து தீம் பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகளிர் பிரீமியர் லீக் சமூக வலைதளப் பக்கத்தில் மகளிர் தின வாழ்த்து தீம் பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சர்வதேச மகளிர் தினம் 2023: மார்ச் 8 அன்று, உலகம் முழுவதும் உள்ள பெண்களின் சாதனைகள் மற்றும் முயற்சிகளை கொண்டாடும் வகையில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொருவர் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய பெண்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு, சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் 'DigitALL: பாலின சமத்துவத்திற்கான முன்னெடுப்பு மற்றும் தொழில்நுட்ப சமத்துவத்தை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது. உலகமே சர்வதேச மகளிர் தினத்தை இன்று கொண்டாடும் நிலையில், மகளிர் பிரீமியர் லீக் (WPL) கூட அந்த நாளைக் குறிக்கும் வகையில் ஒரு வீடியோவை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
மகளிர் பிரமீயர் லீக்:
"உலகெங்கிலும் உள்ள பெண்களின் திறமையை ஒரு தீம் பாடல் போல படம்பிடித்து, இன்று நாம் ஒவ்வொருவரையும் கொண்டாடுகிறோம்! எங்கள் திறமையான வீராங்கனைகள் முதல் எங்கள் அபாரமான பாடகர்கள் வரை, உங்கள் அனைவருக்கும் #HappyWomensDay!" என மகளிர் பிரீமியர் லீக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில் பல கிரிக்கெட் வீராங்கனைகள் மற்றும் கலைஞர்களைக் குறிவைத்து, அவர்களிடம் மகளிர் தினம் குறித்து சிறிய பதிவையும் இணைத்து இந்த தீம் பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், சோஃபி டிவைன், ஷஃபாலி வர்மா, சினே ராணா, ஹர்ஷ்தீப் கவுர், நீதி மோகன், ஷங்கர் மகாதேவன் மற்றும் பலர் தங்கள் வாழ்த்துக்களை இந்த தீம் பாடலின் இடையில் தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
இந்த வீடியோ பதிவேற்றப்பட்ட சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான லைக்குகளை அள்ளியுள்ளது.
குவியும் வாழ்த்துகள்:
இந்த வீடியோ பதிவின் கமண்ட்ஸ் பிரிவில் ஒருவர், "மகளிர் தின வாழ்த்துக்கள்! பெண் என்பவள் ஒரு கனவு காண்பவள், பெண் என்பவள் ஒரு விசுவாசி, பெண் என்பவள் ஒரு அற்புதம் செய்பவள், பெண் என்பவள் ஒரு சாதனையாளர் என எழுதியுள்ளார். அதேபோல், அவள் "நீ" என்று மற்றொரு நபர் எழுதியுள்ளார். இது மிகவும் சிறப்பான மற்றும் அற்புதமான காணொளி. உங்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள். இவ்வளவு சிறந்த வீடியோவைப் பகிர்ந்தமைக்கு நன்றி என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். "சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்" என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர். மேலும் சிலர் வீடியோவிற்கு ஹார்ட் மற்றும் ஃபயர் எமோஜிகளையும் கமெண்ட்டாக பதிவிட்டு இருந்தனர்.