BCCI Annual Contracts: ஆண்களை விட மகளிருக்கு இவ்வளவு சம்பளம் குறைவா..? பிசிசிஐயின் முழு ஒப்பந்த பட்டியல் ஒரு பார்வை!
ஆண்களுக்கான புதிய மத்திய ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. அந்த பட்டியலில் இந்திய அணிக்காக விளையாடி வரும் 26 வீரர்கள் நான்கு கிரேடுகளாக இடம் பெற்றனர்.
![BCCI Annual Contracts: ஆண்களை விட மகளிருக்கு இவ்வளவு சம்பளம் குறைவா..? பிசிசிஐயின் முழு ஒப்பந்த பட்டியல் ஒரு பார்வை! indian men and women cricketers salary difference bcci annual central contracts BCCI Annual Contracts: ஆண்களை விட மகளிருக்கு இவ்வளவு சம்பளம் குறைவா..? பிசிசிஐயின் முழு ஒப்பந்த பட்டியல் ஒரு பார்வை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/27/34b7dab19498c35ad07b308c7aca73fb1682592596810571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று (ஏப்ரல் 27) 2022-23 சீசனுக்கான பெண் கிரிக்கெட் வீராங்கனைகளின் புதிய மத்திய ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டது. இதில் இந்திய அணியில் விளையாடி வரும் 17 வீராங்கனை இடம் பிடித்தனர். இடம் பெற்றுள்ள இந்த 17 வீராங்கனைகள் மூன்று வெவ்வேறு கிரேடுகளில் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு கிரேடுகளில் உள்ள வீராங்கனைகளின் ஆண்டு வருமானம் வேறுபட்டு இருக்கிறது. இந்தநிலையில் சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு, ஆண்களுக்கான புதிய மத்திய ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. அந்த பட்டியலில் இந்திய அணிக்காக விளையாடி வரும் 26 வீரர்கள் நான்கு கிரேடுகளாக இடம் பெற்றனர்.
ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்களின் இந்த கிரேடுகளுக்கு இடையே சம்பளத்தில் பெரும் வித்தியாசம் உள்ளது. இரண்டு ஒப்பந்தப் பட்டியல்களிலும் முதல் கிரேடுகளை மட்டும் ஒப்பிட்டுப் பார்த்தால், 14 மடங்கு வித்தியாசம்.
டாப் கிரேடில் 6.50 கோடி வித்தியாசம்:
மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் 'கிரேடு ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகளுக்கு பிசிசிஐ ஆண்டுக்கு ரூ.50 லட்சத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் ஆண்கள் கிரிக்கெட் வீரர்களின் 'கிரேடு ஏ+' பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்களின் ஆண்டு சம்பளம் மட்டுமே 7 கோடியாக வழங்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் கிரேடுக்கு 16 மடங்கு வித்தியாசம்:
மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் 'கிரேடு பி' வீராங்கனைகளின் ஆண்டு சம்பளம் 30 லட்சம். அதே நேரத்தில், ஆண் கிரிக்கெட் வீரர்களின் இரண்டாம் கிரேடில் அதாவது 'கிரேடு ஏ'வில், ஒவ்வொரு வீரருக்கும் ஆண்டுக்கு 5 கோடி வழங்கப்படுகிறது. அதாவது, பெண்களை விட ஆண்களுக்கு 16 மடங்கு அதிகமாக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
மூன்றாம் கிரேடுக்கு 30 மடங்கு வித்தியாசம்:
மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் 'கிரேடு சி'யில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகளின் ஆண்டு சம்பளம் வெறும் ரூ.10 லட்சம். மறுபுறம், மூன்றாம் வகுப்பில் அதாவது 'கிரேடு பி'யில் ஆண்கள் 3 கோடி பெறுகிறார்கள். அதாவது, இங்கு இருவரின் சம்பளத்திலும் 30 மடங்கு வித்தியாசம் உள்ளது. ஆண் கிரிக்கெட் வீரர்களில் நான்காம் வகுப்பும் உள்ளது. 'கிரேடு சி'யில் சேர்க்கப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் ஆண்டுக்கு 1 கோடி சம்பளம் பெறுகிறார்கள், அதே நேரத்தில் நான்காவது கிரேடு மகளிர் கிரிக்கெட் வீரர்களிடையே வைக்கப்படவில்லை.
மகளிர் கிரிக்கெட் வீரர்களின் சம்பள பட்டியல்:
கிரேடு |
நம்பர் |
பெயர் |
A |
1 |
ஹர்மன்ப்ரீத் கவுர் |
2 |
ஸ்மிருதி மந்தனா |
|
3 |
தீப்தி சர்மா |
B |
1 |
ரேணுகா தாக்கூர் |
2 |
ஜெமிமா ரோட்ரிக்ஸ் |
|
3 |
ஷஃபாலி வர்மா |
|
4 |
ரிச்சா கோஷ் |
|
5 |
ராஜேஸ்வரி கயக்வாட் |
C |
1 |
மேக்னா சிங் |
2 |
தேவிகா வைத்யா |
|
3 |
சபினேனி மேகனா |
|
4 |
அஞ்சலி சர்வாணி |
|
5 |
பூஜா வஸ்த்ரகர் |
|
6 |
சினே ராணா |
|
7 |
ராதா யாதவ் |
|
8 |
ஹர்லீன் தியோல் |
|
9 |
யாஸ்திகா பாட்டியா |
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)