ஹர்திக் பாண்டியா T20 உலகக்கோப்பை அணியில் நீடிக்க தோனிதான் காரணமா? என்ன நடந்தது?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இருக்க முக்கியமாக யார் வலியுறுத்தினார் என்பது தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான்,நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. அதில் முதல் சூப்பர் 12 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்தது.
அந்தப் போட்டியின் போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கின் போது சற்று அடிப்பட்டது. ஏற்கெனவே அவர் காயத்தில் இருந்து மீண்டு வருவதால் வெறும் பேட்ஸ்மேனாக அணியில் களமிறங்கினார். அவர் முழு தகுதியுடன் இல்லாத சூழலில் எதற்காக அவரை அணியில் எடுத்தனர் என்று பலரும் அணி நிர்வாகத்தை கேள்வி எழுப்பினர். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா விவகாரம் தொடர்பாக ஆங்கில தளம் ஒன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் ஹர்திக் பாண்டியா பந்துவீசாததால் அவரை டி20 உலகக் கோப்பைக்கான அணியில் சேர்க்க வேண்டாம் என்று தேர்வுக்குழுவினர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த சமயம் டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட தோனி ஹர்திக் பாண்டியாவின் ஃபினிசிங் திறமைக்காக அவரை அணியில் வைக்க வேண்டும் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து நீடித்தார் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீசிவில்லை. எனவே அவரை வெறும் பேட்ஸ்மேனாக எடுப்பதற்கு பதிலாக நல்ல ஃபார்மில் உள்ள இஷான் கிஷனை எடுத்திருக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கரும் இதே கருத்தை வழியுறுத்தி வந்தார்.
■■■■■■■■■■■□□□ LOADING@hardikpandya7 | #TeamIndia | #T20WorldCup pic.twitter.com/hlwtrGDfNR
— BCCI (@BCCI) October 28, 2021
இந்திய அணி அடுத்த போட்டியில் நாளை மறுதினம் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. முதல் சூப்பர் 12 போட்டியில் இந்த இரு அணிகளும் தோல்வி அடைந்துள்ளனர். ஆகவே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இரண்டு அணிகளும் எஞ்சிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். ஆகவே இந்திய கிரிக்கெட் அணி தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது.
மேலும் படிக்க:நடப்பு சாம்பியனுக்கே பயம் காட்டிட்ட பரமா..- பங்களாதேஷை போராடி வென்ற வெஸ்ட் இண்டீஸ். !