Team India Domination: ரோகித் தலைமையில் அனைத்து ஃபார்மேட்டிலும் முதலிடம்.. கிரிக்கெட்டை ஆட்டிப்படைக்கும் இந்தியா..!
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 115 புள்ளிகளுடன் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலும், 111 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து 106 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையின்படி,டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியா 115, 114 மற்றும் 267 ரேட்டிங் புள்ளிகள் முறையே அனைத்து பார்மேட்டிலும் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணி அனைத்து பார்மேட்களிலும் முதலிடத்தை பிடித்து இந்த சாதனையை படைத்தது.
கடந்த மாதம் நியூசிலாந்தை சொந்த மண்ணில் 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் இந்தியா நம்பர்.1 இடத்தைப் பிடித்தது. ஒரே நேரத்தில் அனைத்து பார்மேட்களிலும் இந்தியா முதலிடம் பெறுவது இதுவே முதல் முறை. இவை அனைத்தும் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியின் போது நடந்தது. இந்த குறிப்பிடத்தக்க சாதனையை முறியடித்த முதல் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆவார்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 115 புள்ளிகளுடன் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலும், 111 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து 106 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
No.1 odi bowler is from no.1 odi team
— Omkar Komarpant (@OddGuy_27) February 15, 2023
No.1 T20 batsman is from no.1 T20 team
No.1 test allrounder is from soon to be no.1 test team.
INDIAN DOMINANCE 🔥🔥🔥
பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் அஸ்வின் 846 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இவருக்கு முன்பு, ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 867 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் 424 புள்ளிகளுடன் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும், 358 புள்ளிகளுடன் அஸ்வின் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார். டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையை பொறுத்தவரை, இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 789 புள்ளிகளுடன் 7 வது இடத்திலும், இந்திய அணியின் கேப்டன் 786 புள்ளிகளுடன் 8வது இடத்திலும் இருக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றால் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.
பார்டர்- கவாஸ்கர் டிராபி 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 17 ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. காயத்திலிருந்து மீண்ட ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது இரண்டாவது போட்டியில் இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், அக்சர் படேல். , குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், சூர்யகுமார் யாதவ்
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்.