Rishabh Pant: விபத்தில் ஏற்பட்ட படுகாயம்.. தீவிர சிகிச்சையில் ரிஷப் பண்ட்.. சச்சின், கோலி கூறியது என்ன?
விபத்தில் சிக்கி காயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டிற்கு, சக விளையாட்டு வீரர்கள் பலரும் விரைந்து குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ரிஷப் பண்ட் எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உத்தரகாண்ட் அடுத்த ரூர்க்கியின் குருகுல் நர்சன் பகுதியில் நடந்த விபத்தில் சிக்கிய ரிஷப் பண்டை, அவ்வழியக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Wishing you a very speedy recovery @RishabhPant17. My prayers are with you.
— Sachin Tendulkar (@sachin_rt) December 30, 2022
இந்நிலையில், ரிஷப் பண்ட் விரைந்து குணமடைய வேண்டும் என, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின், விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் விரைந்து குணமடைய வேண்டும் எனவும், எனது பிரார்த்தனை அவருடன் இருக்கும் எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Get well soon @RishabhPant17. Praying for your recovery. 🙏🏻
— Virat Kohli (@imVkohli) December 30, 2022
ரிஷப் பண்ட் விரைந்து குணமடைய வேண்டும் என வேண்டுவதாக, விராட் கோலி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Praying for your speedy recovery🙏Stay strong brother💪 @RishabhPant17
— Shreyas Iyer (@ShreyasIyer15) December 30, 2022
விரைந்து குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன், வலிமையாக இரு சகோதரா என ஸ்ரேயாஸ் அய்யர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதேபோன்று, ஜடேஜா உள்ளிட்ட பல வீரரக்ளும் ரிஷப் பண்ட் விரைந்து குணமடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிசிசிஐ அறிக்கை:
முன்னதாக, விபத்தில் ரிஷப் பண்டின் தலைப்பகுதியில் 2 வெட்டுகளும், வலது முழங்காலில் தசை நார் கிழிந்துள்ளதாகவும், அதேநேரம் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் சிசிடிவி காட்சிகள்:
இதற்கு மத்தியில், அவர் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், வேகமாக சென்ற கார் டிவைடரில் சிக்கியது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. ஆபத்தான கட்டத்தை அவர் கடந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தனது தாயாருக்கு சர்பிரைஸ் கொடுப்பதற்காகவும் புத்தாண்டை தனது குடும்பத்துடன் கொண்டாடவும் டெல்லியில் இருந்து ரூர்க்கியில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
ரிஷப் பண்ட் வாக்குமூலம்:
தீவிர சிகிச்சைக்கு பிறகு கண் முழித்த ரிஷப் பண்ட், இந்த விபத்து எப்படி நடந்தது என்று காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், ”நான் தான் காரை ஓட்டி வந்தேன். வாகனம் ஓட்டும்போது எதிர்பாராத விதமாக கண் அசந்துவிட்டேன். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து கண் இமைக்கும் நேரத்தில் சாலையோரம் உள்ள டிவைடரில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது என ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.