Pujara: 100வது டெஸ்டில் டக்-அவுட் ஆன புஜாரா..! மோசமான பட்டியலில் இணைந்த இரண்டாவது இந்தியர் - ரசிகர்கள் சோகம்
இந்திய கிரிக்கெட் வீரர் சத்தீஸ்வர் புஜாரா தனது 100வது டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சத்தீஸ்வர் புஜாரா தனது 100வது டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். பார்டர்-கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் களமிறங்கினார். அப்போது நாதன் லயன் பந்துவீச்சில், எல்பிடபள்யூ முறையில் ரன் ஏதும் எடுக்காமல் அவர் ஆட்டமிழந்தார்.
இரண்டாவது இந்திய வீரர்:
இந்திய அணிக்காக இவர் விளையாடும் 100வது டெஸ்ட் போட்டியாகும். தனது 100வது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புஜார் டக்-அவுட் ஆகி ஏமாற்றமளித்துள்ளார். இதன் மூலம் 100வது டெஸ்ட் போட்டியில் டக்-அவுட் ஆன, இரண்டாவது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
100வது போட்டியில் டக்-அவுட் ஆன வீரர்கள்:
முன்னதாக இந்திய அணிக்காக விளையாடிய மற்றொரு வீரரான திலீப் வெங்சர்கார், கடந்த 1988ம் ஆண்டு அவர் பங்கேற்ற தனது 100வது டெஸ்ட் போட்டியில் டக்-அவுட் ஆனார். அதோடு, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜாம்பவானான ஆலன் பார்டர்,மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த கோர்ட்னி வால்ஷ், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் ப்ளெமிங், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டெர் குக் மற்றும் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மெக்கல்லம் ஆகியோரும், தங்களது 100வது போட்டியில் டக்-அவுட் ஆகியுள்ளனர்.
100 டெஸ்ட்களில் விளையாடிய இந்தியர்கள்:
- சச்சின் டெண்டுல்கர் : 200 டெஸ்ட்
- ராகுல் டிராவிட்: 163 டெஸ்ட்
- விவிஎஸ் லட்சுமண்: 134 டெஸ்ட்
- அனில் கும்ப்ளே: 132 டெஸ்ட்
- கபில்தேவ்: 131 டெஸ்ட்
- சுனில் கவாஸ்கர்: 125 டெஸ்ட்
- திலீப் வெங்சர்க்கார்: 116 டெஸ்ட்
- சவுரவ் கங்குலி: 113 டெஸ்ட்
- இஷாந்த் சர்மா : 104 டெஸ்ட்
- விராட் கோலி : 105 டெஸ்ட்
- ஹர்பஜன் சிங்: 103 டெஸ்ட்
- வீரேந்திர சேவாக்: 103 டெஸ்ட்
- புஜாரா: 100 டெஸ்ட்
இதனிடையே, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், விராட் கோலி, வீரேந்திர சேவாக், முகமது அசாருதின் ஆகியோருக்கு பிறகு, டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் ஏழாவது இடத்தில் புஜாரா இருக்கிறார்