Rahane Catch Viral: ராங்காக வந்த கேட்ச்.. டைவ் அடிச்சு பிடிச்ச ராவடி ’ரஹானே’.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், அஜிங்க்யா ரஹானே ஸ்லிப்பில் பீல்டிங் செய்யும் போது ஒரு அற்புதமான கேட்ச் பிடித்தார்
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே பேட்டிங்கில் சொதப்பினாலும், பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாளில், ரஹானே ஸ்லிப்பில் பீல்டிங் செய்தபோது ஒரு அற்புதமான கேட்ச் பிடித்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்ஸின் 87வது ஓவரில் ரஹானே ஸ்லிப்பில் டைவிங் செய்து ஜெர்மைன் பிளாக்வுட்டை ஆட்டமிழக்க செய்தார். இந்த கேட்ச் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி நான்காவது விக்கெட்டை இழந்தது. பிளாக்வுட் 2 பவுண்டரிகள் உதவியுடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அஜிங்க்யா ரஹானேவின் 102வது கேட்ச் ஆகும்.
Good sharp catch from Rahane 👏👏👏 pic.twitter.com/NNA1D0e7Bo
— Raja 🇮🇳 (@Raja15975) July 22, 2023
ரஹானே ரிட்டன்ஸ்:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அஜிங்க்யா ரஹானே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடவில்லை. முதல் போட்டியில் 3 ரன்கள் எடுத்திருந்த அவர், இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
போட்டி நிலவரம்:
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3 நாட்கள் முடிவடைந்துள்ளன. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றாம் நாளில் 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளார். மூன்றாவது நாள் முடிவில், அலிக் அதானாஸ் 37 ரன்களுடனும், ஜேசன் ஹோல்ட் 11 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் திரும்பினர். வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னும் 209 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்கள் எடுத்திருந்தது.