மேலும் அறிய

Virat Kohli Record: சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிக்கும் விராட்கோலி...? கோலியின் மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்..!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட்கோலி முறியடிக்க உள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. இரு அணிகளும் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி புதிய சாதனையை படைக்க உள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அபாரமாக ஆடியுள்ள விராட்கோலி சொந்த மண்ணில், அதாவது இந்தியாவில் ஆடிய ஒருநாள் போட்டிகளில் மட்டும் 5 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார். இந்த சாதனையை படைக்க விராட்கோலிக்கு இன்னும் 6 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

Virat Kohli Record:  சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிக்கும் விராட்கோலி...? கோலியின் மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்..!

விராட்கோலிக்கு முன்பாக, இந்த சாதனையை கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே படைத்துள்ளார். அவர் மட்டுமே இதுவரை இந்தியாவில் ஆடிய ஒருநாள் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் ஆவார். விராட்கோலி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் இந்த சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சச்சினுக்கு அடுத்து இந்த சாதனையை படைக்க உள்ள விராட்கோலிக்கும், சச்சினுக்கும் இடையே ஒற்றுமை உள்ளது. சச்சின் டெண்டுல்கர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தனது 121வது ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை படைத்தார். விராட்கோலியும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்த சாதனையை படைக்க உள்ளார். விராட்கோலிக்கு இது 96வது ஒருநாள் போட்டி ஆகும். இந்த சாதனையை படைத்தால் சொந்த மண்ணில் 5 ஆயிரம் ரன்களை குவித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையுடன், குறைந்த ஒருநாள் போட்டிகளில் சொந்த மண்ணில் 5 ஆயிரம் ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைப்பார்.

Virat Kohli Record:  சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிக்கும் விராட்கோலி...? கோலியின் மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்..!

விராட்கோலி இதுவரை 257 ஒருநாள் போட்டிகளில் ஆடி 12 ஆயிரத்து 285 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 43 சதங்களும், 64 அரைசதங்களும் அடங்கம். ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 183 ரன்களை குவித்துள்ளார். இவற்றில் 39 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். ரன்மெஷின் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விராட்கோலி இதுவரை சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை முறியடித்து கிரிக்கெட் உலகின் நம்பர் 1 வீரராக வலம் வருகிறார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு- முக்கிய விதிகள் என்ன?

உள்துறை செயலாளர் ஆஜராக வேண்டும்; இல்லையேல் பிடிவாரண்ட் – எச்சரித்த நீதிபதி – ஏன்? எதற்கு?

TVK: வெயிட்டான ஆட்களை தூக்கிய விஜய்.. ஆதவ் அர்ஜுனாவுடன் காளியம்மாளும் தவெகவிற்கு ஜம்ப் - எடப்பாடி ஷாக்

ABP Premium

வீடியோ

புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த்! நம்பர் 2 ஆகும் ஆதவ்! விஜய் போட்ட கண்டிஷன்மோதும் அண்ணாமலை நயினார்! களத்தில் இறங்கும் அமித்ஷா! பரபரக்கும் கமலாலயம்ஓரங்கட்டிய சீமான்! அப்செட்டான காளியம்மாள்! உடனே அழைத்த விஜய்Parasakthi Title Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு- முக்கிய விதிகள் என்ன?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு- முக்கிய விதிகள் என்ன?
உள்துறை செயலாளர் ஆஜராக வேண்டும்; இல்லையேல் பிடிவாரண்ட் – எச்சரித்த நீதிபதி – ஏன்? எதற்கு?
உள்துறை செயலாளர் ஆஜராக வேண்டும்; இல்லையேல் பிடிவாரண்ட் – எச்சரித்த நீதிபதி – ஏன்? எதற்கு?
TVK: வெயிட்டான ஆட்களை தூக்கிய விஜய்.. ஆதவ் அர்ஜுனாவுடன் காளியம்மாளும் தவெகவிற்கு ஜம்ப் - எடப்பாடி ஷாக்
TVK: வெயிட்டான ஆட்களை தூக்கிய விஜய்.. ஆதவ் அர்ஜுனாவுடன் காளியம்மாளும் தவெகவிற்கு ஜம்ப் - எடப்பாடி ஷாக்
Virat Kohli: அவுட்டாக்குனது ஒரு குத்தமா? சங்வான் மீது கோலி ரசிகர்கள் சைபர் அட்டாக்!

நிர்வாணமாக வீடியோ கால் வரச்சொல்லி மிரட்டிய வாலிபர் - ரவுண்டு கட்டி தூக்கிய போலீஸ்

CM Stalin: ”சீமானுக்கு மரியாதை இல்லை” பெரியார் விவகாரம், கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்

அஜித்துடன் விபத்தில் சிக்கிய அனுபவம்...நடிகர் ஆரவ் பகிர்ந்த தகவல்

Embed widget