மேலும் அறிய

IND VS SL: இந்தியா - இலங்கை இடையே கடைசி டி-20 போட்டி.. தொடரை வென்று சாதித்து காட்டுவாரா பாண்ட்யா?

இந்தியா - இலங்கை இடையேயான கடைசி டி-20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த, டி-20 தொடரில் இந்திய அணியில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இளம் இந்திய அணி களம் கண்டு வருகிறது.

தொடரை வெல்லப்போவது யார்?

மும்பையில் நடைபெற்ற தொடரின் முதல் டி-போட்டியில், 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. புனேவில் நடைபெற்ற இரண்டாவதுவது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், தொடரை வெல்லப் போவது யார் என்பதை உறுதி செய்யும் 3-வது கடைசி டி-20 இன்று நடைபெற உள்ளது.  ராஜ்கோட் நகரில் இன்று நடைபெற உள்ளது போட்டி, இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் மும்முரம் காட்டுவதால், போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்கு வாய்ப்பு ஏதும் இல்லை என உள்ளூர் வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி நிலவரம்:

இந்திய அணியில் தொடக்க வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவது பலவீனமாக கருதப்படுகிறது. சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் சிறப்பான பார்மில் உள்ளனர். ஹர்திக் பாண்ட்யா அணியின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்க வேண்டி உள்ளது. பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை, கடைசி போட்டியை போன்று நோ பால்களை வீசாமல் ஒழுக்கத்துடன் செயல்பட்டாலே அணியின் வெற்றிக்கு உதவ முடியும் என்பது குறிப்பிடத்தகக்து. இதனிடையே, காயம் காரணமாக, இலங்கை அணிக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து, இந்திய வீரர் சஞ்சு சாம்சன் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாதிப்பாரா பாண்ட்யா?

இந்திய டி-20 அணியின் முழு நேர கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க இந்திய கிரிக்கெட் சம்மேளனம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கிடைக்கும் சூழல்களில், கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு திறமையை வெளிப்படுத்த வேண்டிய சூழலில் பாண்ட்யா இருக்கிறார். எனவே உள்நாட்டில் நடக்கும் இலங்கை உடனான இந்த தொடரை கைப்பற்றுவது பாண்ட்யாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்திய அணியின் உத்தேச வீரர்கள்: இஷான் கிஷன்(வி.கீ), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா(கே), தீபக் ஹூடா, அக்சர் படேல், சிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை அணியின் உத்தேச வீரர்கள்:  பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ்(டபிள்யூ), தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(கேட்ச்), வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget