மேலும் அறிய

IND vs SL LIVE Score: அரையிறுதிக்குச் சென்ற இந்தியா - 55 ரன்களுக்குச் சுருண்ட இலங்கை

India vs Sri Lanka LIVE Score, World Cup 2023: உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றது. அதன் உடனடி அப்டேட்டுகளை இங்கு காணலாம்.

LIVE

Key Events
IND vs SL LIVE Score:  அரையிறுதிக்குச் சென்ற இந்தியா - 55 ரன்களுக்குச் சுருண்ட இலங்கை

Background

IND vs SL LIVE Score:

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை(India vs Sri Lanka) அணிகள் மோதுவது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிரிக்கெட்டின் திருவிழாக்களில் ஒன்றாக 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 32 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் வழக்கத்தை விட அனைத்து போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் வகையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. 

நடப்பு தொடரை பொறுத்தவரை இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் வலம் வருகிறது. அந்த அணி 6 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கிட்டதட்ட அரையிறுதி வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்து விடும். இந்திய அணியை பொறுத்தமட்டில் பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா சிறந்த பார்மில் உள்ளார். அதேபோல் விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இன்னும் சுப்மல் கில், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரும் தங்கள் பணியை சிறப்பாக செய்தால் வெற்றி இந்திய அணிக்கே கிடைக்கும். பந்து வீச்சிலும் பும்ரா, ஷமி, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

அதேசமயம் இந்த உலகக்கோப்பையில் 6 போட்டிகளில் ஆடி 2 வெற்றி, 4 தோல்விகளுடன் இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் 4 போட்டிகள் இருக்கும் நிலையில், அனைத்திலும் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கான பந்தயத்தில் பிற அணிகளுக்கு கடுமையான சோதனையை கொடுக்க வாய்ப்புள்ளது.அந்த அணி கடைசியாக ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. இதனால் சோகமாக உள்ள ரசிகர்களுக்கு இந்த போட்டியில் வெற்றி பெற்று இலங்கை அணி நம்பிக்கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. அதேசமயம் இந்தியா - இலங்கை(India vs Sri Lanka Head to Head) அணிகள் இதுவரை 167 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில் இதில் 98 போட்டிகளில் இந்தியாவும், 57 போட்டிகளில் இலங்கையும் வெற்றி கண்டுள்ளது.  ஒரு ஆட்டம் டிரா ஆன நிலையில், 11 ஆட்டங்கள் முடிவில்லாமல் கைவிடப்பட்டது. அதேபோல் உலகக்கோப்பையில் இரு அணிகளும் 9 முறை நேருக்கு நேர் மோதி தலா 4 வெற்றிகளுடன் சம நிலையில் உள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. 

மும்பை வான்கடே மைதானத்தில் மதியம் 2 மணிக்கு நடைபெறும் இப்போட்டியில் யார் வெற்றி பெறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் வெகுவாக எழுந்துள்ளது. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சிறந்தது என்பதால் இதில் ரன் மழையை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

20:31 PM (IST)  •  02 Nov 2023

50 ரன்களை கடந்த இலங்கை..

19 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 51 ரன்களை சேர்த்துள்ளது.

20:16 PM (IST)  •  02 Nov 2023

2 விக்கெட்டுகள் மட்டுமே அவசியம்..

15 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 2 வ்க்கெட்டுகள் மட்டுமே அவசியம்.

20:07 PM (IST)  •  02 Nov 2023

சாதனை படைத்த சமன்..

ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற, ஜாகீர் கானின் சாதனையை ஷமி(44) சமன் செய்துள்ளார்.

20:06 PM (IST)  •  02 Nov 2023

8வது விக்கெட் காலி

12 ரன்கள் சேர்த்து இருந்த மேத்யூஸ், ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

19:56 PM (IST)  •  02 Nov 2023

மேலும் ஒரு விக்கெட்..

ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் சமீரா

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
Men Mentality: புரிஞ்சுக்கோங்கமா..! கதறும் கணவன்மார்கள், விடாமல் அடிக்கும் மனைவிகள் - ஆண்களிடம் இல்லாத திறன்கள்
Men Mentality: புரிஞ்சுக்கோங்கமா..! கதறும் கணவன்மார்கள், விடாமல் அடிக்கும் மனைவிகள் - ஆண்களிடம் இல்லாத திறன்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
Men Mentality: புரிஞ்சுக்கோங்கமா..! கதறும் கணவன்மார்கள், விடாமல் அடிக்கும் மனைவிகள் - ஆண்களிடம் இல்லாத திறன்கள்
Men Mentality: புரிஞ்சுக்கோங்கமா..! கதறும் கணவன்மார்கள், விடாமல் அடிக்கும் மனைவிகள் - ஆண்களிடம் இல்லாத திறன்கள்
Cars Air Bags: கம்மி விலை, ஆனாலும் உயிரை காப்பாற்றும் - 6 ஏர் பேக்குகளை கொண்ட கார்கள்,  உங்க பட்ஜெட் என்ன?
Cars Air Bags: கம்மி விலை, ஆனாலும் உயிரை காப்பாற்றும் - 6 ஏர் பேக்குகளை கொண்ட கார்கள், உங்க பட்ஜெட் என்ன?
TN Rain Update: சென்னைக்கு ரெட் அலெர்ட், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
TN Rain Update: சென்னைக்கு ரெட் அலெர்ட், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
"கல்வியில் பெண்கள் உந்து சக்தியாக உருவெடுத்துள்ளனர்" மார்தட்டிய மத்திய அமைச்சர்!
Embed widget