IND vs SA 1ST TEST DAY 3 LIVE : மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 16-1
செஞ்சூரியனில் நடைபெற்று வரும் இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் லைவ் அப்டேட்களை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
LIVE
Background
இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் டெஸ்ட் போட்டித்தொடரின் நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்திய அணி தற்போது 4 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்களுடன் ஆடி வருகிறது. இந்திய தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 123 ரன்களில் அவுட் ஆனார். ரஹானே 43 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளார்.
Big blow for India!
— ICC (@ICC) December 28, 2021
Kagiso Rabada removes KL Rahul for 123, breaking the 79-run fourth-wicket stand.#WTC23 | #SAvIND | https://t.co/fMLQOADpkL pic.twitter.com/ywFjUFoISW
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 16-1
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 5 ரன்களுடனும், ஷர்துல் தாக்கூர் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
197 ரன்களுக்கு சுருண்ட தெ.ஆப்பிரிக்கா.! 130 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா..!
செஞ்சூரியனில் இந்தியாவிற்கு எதிராக முதல் இன்னிங்சில் ஆடி வரும் தென்னாப்பிரிக்க அணி 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனால், இந்திய அணி 130 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
5வது விக்கெட்டை வீழ்த்திய முகமது ஷமி..! 9வது விக்கெட்டை இழந்த தெ.ஆ...!
தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் வரிசையை முகமது ஷமி தனது வேகப்பந்து வீச்சால் நிலைகுலையச் செய்துள்ளார். அவரது அபாரமான பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க அணி 9வது விக்கெட்டை இழந்துள்ளது. முகமது ஷமி மட்டும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவிற்காக அரைசதம் அடித்த தெம்பா பவுமா அவுட்...! முகமது ஷமி அபாரம்..!
இந்தியாவிற்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் நிலையில், அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன் பவுமா சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால், அரைசதம் அடித்த சில நிமிடங்களிலே முகமது ஷமி பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 103 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
6வது விக்கெட்டையும் இழந்தது தென்னாப்பிரிக்கா...!
இந்தியாவிற்கு எதிராக முதல் இன்னிங்சில் ஆடி வரும் தென்னாப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வரும் நிலையில் 6வது விக்கெட்டிற்கு களமிறங்கிய வியான் மல்டரும் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஷமி பந்தில் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.