மேலும் அறிய

IND vs RSA: தொடரை வெல்லுமா இந்தியாவின் இளம்படை? இன்று நடக்கிறது மூன்றாவது ஒருநாள் போட்டி..!

IND vs RSA: இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது.

IND vs RSA: இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கான மூன்றாவது மற்றும் கடைசி  ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. ஏற்கனவே நடந்த இரண்டு ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ள காரணத்தால், தொடரை வெல்லப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும்  போட்டி என்பதால், இரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட தென் ஆப்ரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 போட்டி முடிந்த விட்டதால் தற்போது ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முடிந்த டி20 தொடரில் கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 

ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிந்த நிலையில் இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது. இதற்கு முன்னர் நடந்த இரண்டு போடிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பவே, மிடில் ஆர்டரில் இறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் போராடியும் வெற்றி பெற முடியவில்லை. 

இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியைப் பொறுத்தவரை ஸ்ரேயஸ் ஐயர் 113 ரன்களும், இஷான் கிஷன் 93 ரன்களும் விளாசி அணியை வெற்றி பெறச்செய்தனர். 

தொடரை யார் வெல்லப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் போட்டி இன்று நடைபெறவுள்ளதால், இரு அணி வீரர்களும் ரசிகர்களும் மிகவும் உற்சாகமாக உள்ள்னர். 

 

போட்டி மழையால் பாதிக்கப்படுமா..? 

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது ஒருநாள் போட்டியும் மழையால் கைவிடப்பட வாய்ப்புகள் உள்ளது. செவ்வாய்க்கிழமை டெல்லியில் 40 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட இந்தியாவில் தற்போது மழை பெய்து வருவதால், அதன் தாக்கத்தை இங்கும் காணலாம்.

இந்தியா:

ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மான் கில், ரிதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன். ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அவேஷ் கான், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், ரஜத் பாடிதார், ஷாபாஸ்.

தென்னாப்பிரிக்கா:

டெம்பா பவுமா (கேப்டன்), ஜான்மேன் மலான், குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம், ஹென்ரிக் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ், காகிசோ ரபாடா, லுங்கி என்கிடி, தபரிஸ் ஷம்சி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சென் பெஹ்லுக்வாயோ.

இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது. ;

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Latest Gold Silver Rate:வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Latest Gold Silver Rate:வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
BCCI: மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..?  ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..? ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
TN Rain Alert: அடுத்த 5 நாட்கள் கவனமாக இருங்க.. தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா?
அடுத்த 5 நாட்கள் கவனமாக இருங்க.. தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா?
தஞ்சாவூர் மாநகராட்சி : 3-ஆம் சனிக்கிழமை தொற்றாநோய்கள் சிறப்பு மருத்துவமுகாம்
தஞ்சாவூர் மாநகராட்சி : 3-ஆம் சனிக்கிழமை தொற்றாநோய்கள் சிறப்பு மருத்துவமுகாம்
Iranian President Raisi: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
Embed widget