Watch Video: ஷாஹீன் அப்ரிடியிடம் அடுத்தடுத்து வீழ்ந்த விராட், ரோஹித்.. ஆரம்பமே தடுமாறும் இந்திய அணி..!
இப்போது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஷாஹீன் அப்ரிடி மீண்டும் அதையே செய்து ரோஹித் சர்மாவை வெளியேறினார்.
அனைவருக்கும் கடந்த டி20 உலகக் கோப்பை 2021 இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி ஞாபகம் இருக்கிறதா..? இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடியது. போட்டியின் முதல் ஓவரிலேயே பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி, தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மாவை இன் ஸ்விங் செய்து எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேறினார். அன்றைய போட்டியில் அந்த அடியிலிருந்து இந்திய அணியால் முழு போட்டியிலும் மீள முடியவில்லை. உலகக் கோப்பை வரலாற்றில் முதன் முறையாக பாகிஸ்தான் அணி இந்திய அணியை வென்றது.
Shaheen Afridi's strikes Rohit Sharma virat Kohli Walk out 💥 #AsiaCup2023 #PAKvIND #INDvsPAK#RohitSharma #ShaheenShahAfridi #INDvsPAK #INDvPAK#AsiaCup2023 #AsiaCup23 #PAKvIND #BabarAzam pic.twitter.com/oeQZwJhryJ
— Ikramullah Naseem (@realikramnasim) September 2, 2023
இப்போது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஷாஹீன் அப்ரிடி மீண்டும் அதையே செய்து ரோஹித் சர்மாவை வெளியேறினார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 22 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மா, 5வது ஓவர் வீசிய அப்ரிடி பந்தை எதிர்கொண்டு க்ளீன் போல்டானார். இந்த பந்துக்கு முன்பு இரண்டு பந்துகளையும் அவுட் ஸ்விங் செய்த அப்ரிடி, டக்கென்று மூன்றாவது பந்தை இன் ஸ்விங் செய்ய நிலை தடுமாறிய ரோஹித் சர்மா போல்டானார்.
Rohit Sharma gets off to the proceedings with a boundary to Shaheen Afridi on the second delivery! 🔥
— Muskan Khan (@Muskan_Khan_21) September 2, 2023
Big innings loading for the Skipper? 👀#RohitSharma #INDvsPAK #CricketTwitter #INDvPAK #ViratKohli𓃵 #RohitSharma𓃵 pic.twitter.com/Hjy3Wg6x90
முன்னதாக, ஷாஹீன் அப்ரிடி தனது ஸ்பெல்லின் இரண்டாவது ஓவரிலும் அதையே முயற்சித்தார். மீண்டும் அதே பந்தை வீசினார். ரோஹித் ஷர்மா தயாராக இருந்தார், அவர் பந்தை புரட்டினார். மணிக்கு 139 கிமீ வேகத்தில் பறந்த இந்த பந்து டீப் பேக்வர்ட் ஸ்கொயர் லெக்கை நோக்கி சென்று பவுண்டரி லைன்னை அடைந்தது.
Virat Kohli dismissed for 4 in 6 balls.#INDvsPAK #PAKvIND #RohitSharma #RohitSharma𓃵 #HappyBirthdayJungkook pic.twitter.com/Oet0lRveCt
— live Scores Update (@farhanr76478751) September 2, 2023
அதனைதொடர்ந்து உள்ளே வந்த விராட் கோலியும் அப்ரிடி பந்தில் இன் சைட் எட்ஜ் ஆகி அவுட்டானார். தற்போது, இந்திய அணி 7 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்களுடன் தடுமாறி வருகிறது.