IND vs PAK: ஆசிய கோப்பை வரலாற்றில் இதுவே முதல்முறை.. இந்திய அணிக்கு எதிராக பெரிய சம்பவம் செய்த பாகிஸ்தான்!
இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தங்கள் பெயரில் ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளனர். அது என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
IND vs PAK Stats & Records: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 267 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 48.5 ஓவரில் 266 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் ஹர்திக் பாண்டியா 90 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் அதிகபட்சமாக 87 ரன்கள் எடுத்தார். அதேபோல், இஷான் கிஷான் 81 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 81 ரன்கள் குவித்தார். முன்னதாக, டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
10 பேட்ஸ்மேன்களும் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களால் காலி:
இந்த போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தங்கள் பெயரில் ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மையில் இந்திய அணியின் 10 பேட்ஸ்மேன்களும் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களால் ஆட்டமிழந்தனர். ஆசிய கோப்பை வரலாற்றில் இதுவே முதல்முறை. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹரிஸ் ரவூப் மற்றும் முகமது நசீம் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணியின் 10 பேட்ஸ்மேன்களும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களால் ஆட்டமிழந்தனர்.
அசத்திய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள்:
ஷாஹீன் அப்ரிடி இந்திய விளையாடிய 10 ஓவரில் 35 ரன்களுக்கு 3 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார். ஷாஹீன் அப்ரிடி ஆட்டத்தின் தொடக்கத்தில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை வெளியேற்றினார். அதனை தொடர்ந்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு அவுட் செய்தார். அதே நேரத்தில், ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோரை ஹரிஸ் ரவுப் வெளியேறினார்.
போட்டி சுருக்கம்:
மறுபுறம், இந்த போட்டியைப் பற்றி பேசுகையில், பாகிஸ்தானுக்கு 267 ரன்கள் வெற்றி இலக்காக உள்ளது. முன்னதாக, டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பல்லேகலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
விளையாடும் இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
விளையாடும் பாகிஸ்தான் அணி: ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்