மேலும் அறிய

IND vs NZ 1st Test:"அச்சச்சோ"கழுத்தில் ஏற்பட்ட திடீர் வழி! இந்தியா-நியூசிலாந்து டெஸ்டில் இருந்து விலகும் சுப்மன் கில்?

கழுத்து மற்றும் தோள்பட்டை வலி காரணமாக பெங்களூரில் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் சுப்மான் கில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்:

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன்படி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணியை எதிர்கொண்டது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்ற்றும் 3 டி20 போட்டிகளிலும் வென்று இந்திய அணி மொத்தமாக தொடரை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

இந்த போட்டிகள் நாளை அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உள் நாட்டில் நடைபெறும் இந்த போட்டியில் நியூசிலாந்தை எதிர் கொள்ள தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இச்சூழலில் தான் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சுப்மன் கில் விலகல்?

அதாவது, கழுத்து மற்றும் தோள்பட்டை வலி காரணமாக பெங்களூரில் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் சுப்மான் கில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்பட்டுள்ளது.  நேற்று இது தொடர்பான தகவலை பிசிசிஐயிடன் சுப்மன் கில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நாளை காலை அவர் அணியில் விளையாடுவாரா இல்லையா என்ற தகவல் வெளியாகும் என்று  தகவல்கள் தெரிவிக்கின்றன.  சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்த வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்டில்  சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 119 ரன்களை குவித்தார்.

கான்பூர் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் கில் 39 ரன்கள் எடுத்தார். ஒரு வேளை சுப்மன் கில் அணிக்கு திரும்பவில்லை என்றால் 3 வது இடத்தில் யாரை களம் இறக்கலாம் என்ற இந்திய அணி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. கே.எல்.ராகுல் அல்லது சர்பராஸ் கான் மற்றும் துர்வ் ஜூரல் போன்றவர்கள் மிடில் ஆர்டரில் இடம்பெற உள்ளனர்.

மிடில் ஆர்டரில் அக்சர் படேல் களம் இறங்குவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.  முன்னதாக, பெங்களூருவில் கனமழை பெய்து வருவதால் போட்டி குறித்த நேரத்தில் தொடங்குமா என்ற சந்தேகமும் நிலவுகிறது. வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது. சென்னை மற்றும் கான்பூரில் உள்ள ஆடுகளங்கள் முற்றிலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக இல்லை. இதனால் எப்படிப்பட்ட மாற்றங்கள் இருக்கும் என்று பெருத்

நியூசிலாந்து டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணைக் கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் ), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் , முகமது. சிராஜ், ஆகாஷ் தீப்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
எந்த நாளில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்? வார நாட்களில் இப்படி இருந்து பாருங்க!
எந்த நாளில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்? வார நாட்களில் இப்படி இருந்து பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
எந்த நாளில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்? வார நாட்களில் இப்படி இருந்து பாருங்க!
எந்த நாளில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்? வார நாட்களில் இப்படி இருந்து பாருங்க!
Ind vs SA T20: தீயாய் வந்த திலக்.. சாத்தியெடுத்த சஞ்சு.. இத்தனை சாதனைகளா!
Ind vs SA T20: தீயாய் வந்த திலக்.. சாத்தியெடுத்த சஞ்சு.. இத்தனை சாதனைகளா!
கஞ்சா விக்கிறவங்கள விட்டுடுங்க; புகையிலை விக்கிறவங்கள மட்டும் புடிங்க - கொதித்தெழும் வியாபாரிகள்
கஞ்சா விக்கிறவங்கள விட்டுடுங்க; புகையிலை விக்கிறவங்கள மட்டும் புடிங்க - கொதித்தெழும் வியாபாரிகள்
Rohit Sharma: வந்தாச்சு குட்டி ஹிட்-மேன் - ரோகித் சர்மாவிற்கு ஆண் குழந்தை, குவியும் வாழ்த்து மழை
Rohit Sharma: வந்தாச்சு குட்டி ஹிட்-மேன் - ரோகித் சர்மாவிற்கு ஆண் குழந்தை, குவியும் வாழ்த்து மழை
அரசு வேலை கன்ஃபார்ம் - ஆசைவார்த்தை கூறி மோசடி செய்த ஆயுதப்படை காவலர் - சிக்கியது எப்படி?
அரசு வேலை கன்ஃபார்ம் - ஆசைவார்த்தை கூறி மோசடி செய்த ஆயுதப்படை காவலர் - சிக்கியது எப்படி?
Embed widget