Ind Vs Eng: 5-வது டெஸ்ட்..11 பேர் கொண்ட அணியை அறிவித்தது இங்கிலாந்து! முக்கிய வீரருக்கு இடம்!
இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 11 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது. இதில் கடந்த போட்டியில் பங்கேற்ற ஆலி ராபின்சன் நீக்கப்பட்டுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. அந்தவகையில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தனது சொந்த நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இதனிடையே இந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் மார்ச் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இங்கிலாந்து அணி வீரர்கள்:
England's playing XI for the 5th Test:
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 6, 2024
Crawley, Duckett, Pope, Root, Bairstow, Stokes (C), Foakes (WK), Hartley, Wood, Bashir and Anderson. pic.twitter.com/ZYwkG8RZDq
இந்நிலையில் இந்த போட்டிக்கான 11 பேர் கொண்ட பட்டியலை இங்கிலாந்து அணி அறிவித்து உள்ளது. அதன்படி, பென் டக்கெட், சாக் க்ராலி, ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, ஷோயப் பஷீர், மார்க் வட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். அந்த வகையில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் அந்த அணி களம் காண உள்ளது. அதேபோல், கடந்த போட்டியில் பங்கேற்ற ஆலி ராபின்சனுக்கு பதிலாக மார்க் வுட் அணியில் இடம் பிடித்துள்ளார். இச்சூழலில் ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்று இங்கிலாந்து அணியும், வெற்றியுடன் தொடரை முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியும் களம் இறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!