100th Test: 100-வது டெஸ்ட்டில் அடுத்தடுத்த நாளில் களமிறங்கிய ஜாம்பவான்கள் - செயல்பாடுகள் எப்படி?
100-வது டெஸ்ட் போட்டியில் களம் கண்ட அஸ்வின், பார்ஸ்டோ, டிம் செளதி மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரின் செயல்பாடுகள் என்ன என்பதை பார்ப்போம்.
இந்தியா - இங்கிலாந்து:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ. சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
100-வது டெஸ்ட்:
இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. அந்த வகையில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தனது சொந்த நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இதனிடையே இந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று தொடங்கியது.
A standing ovation for Kane Williamson as he makes his way to the crease in Test Match No.100 #AUSvsNZ | #AUSvNZpic.twitter.com/atQEllJe7S
— Don Cricket 🏏 (@doncricket_) March 8, 2024
இந்த போட்டியில் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் இங்கிலாந்து அணி வீரர் ஜானி பார்ஸ்டோவ் ஆகியோர் களம் இறங்கியதன் மூலம் தங்களது 100-வது டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய வீரர்கள் என்ற பெருமையை பெற்றனர். இந்நிலையில் தான் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்ற வருகிறது. இதில், 2 வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர்களான டிம் செளதி மற்றும் கேன் வில்லியம்சன் களம் இறங்கியதன் மூலம் சர்வதேச அளவில் 100 டெஸ்ட் போட்டிகளில் களம் இறங்கிய வீரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.
100 வது டெஸ்ட்டில் செயல்பாடுகள் என்ன?
தன்னுடைய 100 வது டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 11.4 ஓவர்கள் வீசி 1 ஓவர் மெய்டன் செய்து, 51 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதேபோல், தன்னுடைய 100 வது டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய ஜானி பார்ஸ்டோவ் அதிரடியாக விளையாடினாலும் குறைந்த ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்துச் சென்றார். அவர் மொத்தம் 18 பந்துகள் களத்தில் நின்று 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 29 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
நியூசிலாந்து அணியின் கேப்டன் டி செளதி முதல் நாள் ஆட்ட நேர முடிவின் படி 8 ஓவர்கள் வீசி 1 ஓவர் மெய்டன் செய்து 29 ரன்களை விட்டுக்கொடுத்து இருக்கிறார்.
அவரது பேட்டிங்கை பொறுத்தவரை 20 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 26 ரன்கள் எடுத்திருக்கிறார்.
தன்னுடைய 100-வது டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய மற்றொரு நியூசிலாந்து அணி வீரரான கேன் வில்லியம்சன் 37 பந்துகள் களத்தில் நின்று 2 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 17 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!