India vs Barbados, CWG 2022: பந்துவீச்சில் மீண்டும் அசத்திய ரேணுகா சிங்.. அசால்ட்டாக அரையிறுதிக்கு சென்ற இந்திய பெண்கள் அணி!
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஏ பிரிவில் பார்படாஸ் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது.
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஏ பிரிவில் பார்படாஸ் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது.
காமன்வெல்த் போட்டியில் குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணியும், பார்படாஸ் பெண்கள் அணியும் நேருக்கு நேர் நேற்று மோதினர். முதலில் டாஸ் வென்ற பார்படாஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா களமிறங்கினர்.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஸ்மிருதி மந்தனா 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க, மற்றொரு தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா வழக்கம்போல தனது அதிரடியை தொடர்ந்தார். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி 26 பந்துகளில் 43 ரன்கள் அடித்து ரன் அவுட் முறையில் வெளியேறினார்.
ஹர்மன்பிரீத் கவுர் கோல்டன் டக் மூலம் ஆட்டமிழக்க, இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்களுக்கு தடுமாறியது. 3 வதாக களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் எடுத்தார். ஜெமிமா மற்றும் தீப்தி சர்மா ஐந்தாவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் சேர்த்து இந்தியா 160 ரன்களை கடக்க உதவி செய்தனர்.
20 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்திருந்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 56 ரன்களுடனும், தீப்தி சர்மா 34 ரன்களுடனும் கடைசி வரை அவுட்டாகமல் களத்தில் இருந்தனர்.
Powering through to the semi-finals!
— ICC (@ICC) August 4, 2022
India look in imperious form at #B2022 👀
Scorecard: https://t.co/zsmkwBiAMx pic.twitter.com/ES3AUpRJiL
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பார்படாஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் 4 விக்கெட்களை வேக புயல் ரேணுகா சிங் டக்கென்று கைப்பற்ற, இந்தியாவின் பக்கம் வெற்றி காற்று அடிக்க தொடங்கியது.
தொடர்ந்து பார்படாஸ் அணியின் விக்கெட்கள் வரிசையாக சரிய, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் 62 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய பெண்கள் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
பார்படாஸ் அணியில் அதிகபட்சமாக கிஷோனா நைட் 16 ரன்களும், ஷகேரா செல்மன் 12 ரன்களும் எடுத்திருந்தனர்.
இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்களும், மேகனா, சினே ராணா, ராதா யாதவ் மற்றும் ஹர்மன் தலா 1 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான காமன்வெல்த் முதல் போட்டியிலும் ரேணுகா சிங் 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்