IND vs BAN 1st ODI: சொந்த மண்ணில் வலுவான அணியாக வங்கதேசம்.. அனுபவ அணியுடன் களமிறங்கும் இந்தியா.. யாருக்கு வெற்றி?
கடந்த 2015ம் ஆண்டு சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் வென்றது. இதையடுத்து வங்கதேச வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவிற்கு எதிராக கிரிக்கெட் தொடரை வென்று சாதனை படைத்தது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர் தோல்விக்கு பிறகு, இந்திய அணி அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது. இதற்காக டி20 உலகக் கோப்பை பின் நியூசிலாந்து சென்ற இந்திய அணி டி2ஒ தொடரை வென்ற கையோடு, ஒருநாளை தொடரை இழந்தது.
அந்த தொடரில் டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவானும் தலைமை தாங்கினர். இந்த தொடருக்கு பின்னர், இந்திய அணி வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதற்கான முதல் போட்டியானது வங்கதேசத்தில் உள்ள டாக்கா மைதனத்தில் பகல் 12 மணிக்கு தொடங்குகிறது.
இந்த தொடருக்காக இந்திய அணியில் கேப்டனாக மீண்டும் ரோகித் சர்மா களமிறங்குகிறார். அவரை தொடர்ந்து துணை கேப்டன் கே.எல்.ராகுலும், விராட் கோலியும் அணிக்கு திரும்புவதால் இந்திய அணி பேட்டிங் வரிசையில் ஸ்டாராங் ஆகிறது.
சொந்த மண்ணில் வங்கதேசம்:
மற்ற தொடர்கள், மற்ற நாடுகள் சுற்றுபயணம் மேற்கொள்ளும்போது வங்கதேச அணி தடுமாறினாலும், தனது சொந்த மண்ணில் எதிரணிகளை புலியாக புரட்டி எடுத்து வருகிறது. கடைசியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு டி20 தொடரை வென்றது. அதேபோல், கடந்த 2015ம் ஆண்டு சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் வென்றது. இதையடுத்து வங்கதேச வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவிற்கு எதிராக கிரிக்கெட் தொடரை வென்று சாதனை படைத்தது. கடந்த 2007 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி, வங்கதேசத்திற்கு தோல்வியடைந்தது இன்றளவும் யாராலும் மறக்க முடியாதது.
போட்டி எப்போது தொடங்கும்..?
இந்தியா - வங்கதேச இடையிலான முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு டாக்கா நகரில் உள்ள ஷேர் -ஈ- பங்ளா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் இதுவரை இந்திய அணி வங்கதேசத்தை 13 ஒருநாள் போட்டிகளில் சந்தித்து, 9 ல் வெற்றிபெற்றுள்ளது.
இந்த மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிராக அதிக ரன் எடுத்த இந்திய வீரர்:
- விராட் கோலி - அதிக ரன்கள்: 786
- விராட் கோலி - அதிக சதங்கள்: 4
- விராட் கோலி - அதிகபட்ச ஸ்கோர்: 183
இந்த மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர்:
- அஷ்வின் - 17 விக்கெட்கள்
- சிறந்த பந்துவீச்சு: இர்பான் பதான்(4/32)
கணிக்கப்பட்ட இந்திய அணி:
1. ரோகித் ஷர்மா (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. விராட் கோலி, 4. ஷ்ரேயாஸ் ஐயர், 5. கேஎல் ராகுல், 6. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), 7. வாஷிங்டன் சுந்தர், 8. அக்சர் படேல், 9. ஷர்துல் தாக்கூர், 10. தீபக் சாஹர், 11. முகமது சிராஜ்
கணிக்கப்பட்ட வங்கதேச அணி:
1. லிட்டன் தாஸ் (கேப்டன்), 2. அனாமுல் ஹக், 3. ஷாகிப் அல் ஹசன், 4. முஷ்பிகுர் ரஹீம் (வாரம்), 5. மஹ்முதுல்லா, 6. அபிஃப் ஹொசைன், 7. யாசிர் அலி, 8. மெஹிதி ஹசன் மிராஸ், 9. ஹசன் மஹ்மூத், 10. முஸ்தபிஸுர் ரஹ்மான், 11. எஹோபாஸ் ஹின்து