மேலும் அறிய

IND vs AUS 4th Test LIVE Score: டிராவில் முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டி; 2 - 1 என தொடரை வென்ற இந்தியா..!

IND vs AUS 4th Test LIVE Score: இந்திய- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்

LIVE

Key Events
IND vs AUS 4th Test LIVE Score:  டிராவில் முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டி; 2 - 1 என தொடரை வென்ற இந்தியா..!

Background

இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி மார்ச் 9ம் தேதி (இன்று) அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்றுள்ளன. 

இந்த மூன்று போட்டிகளில் இந்திய அணி 2 வெற்றிகள், 1 தோல்வியுடன் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டு டெஸ்ட் தோல்விக்கு பிறகு மீண்டெழுந்த ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை 3வது டெஸ்ட்டில்  வீழ்த்தியது. இந்த சூழலில் அகமதாபாத்தில் இன்று தொடங்கும் கடைசி போட்டியின் முடிவை பொறுத்தே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா..? என்பது தெரியும். 

ஆடுகளம் எப்படி? 

இந்த தொடர் முழுவதும் நடைபெற்ற போட்டிகள் அனைத்து ஆடுகளம் குறித்து இதுவரை பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. கடந்த மூன்று போட்டிகளில், நாக்பூர், டெல்லி, இந்தூரில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவே பிட்ச் இருந்தது. இதேபோல், இன்று தொடங்கும் அகமதாபாத் டெஸ்ட் போட்டியிலும் சுழலுக்கு சாதகமாக பிட்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சார் படேல் போன்ற உலகத் தரம் சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அகமதாபாத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தால் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவது மிகவும் கடினம்.

யார் யாருக்கு வாய்ப்பு..? 

ரிஷப் பண்ட் இல்லாததால், இந்திய அணி விக்கெட் கீப்பருக்கான தேடலில் தவித்து வருகிறது. நாக்பூர் டெஸ்டில் அறிமுகமான கே.எஸ். பாரத் விக்கெட் கீப்பிங்லில் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் பெரிதாக எந்தவொரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதையடுத்து, கே.எஸ். பாரத்திற்கு பதிலாக இந்திய அணி நிர்வாகம் இஷான் கிஷனை இந்த போட்டியில் களமிறக்கலாம். 

கடந்த போட்டியில் முகமது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் களமிறக்கப்பட்டு, விக்கெட்களையும் வீழ்த்தினார். ஆனால், இந்த தொடரில் முகமது சிராஜ் பெரியளவில் விக்கெட் வேட்டையில் ஈடுபடவில்லை. எனவே இந்த போட்டியில் சிராஜுக்கு பதிலாக ஷமி மீண்டும் இடம் பெற வாய்ப்புள்ளது. 

பார்வையிடும் பிரதமர்கள்:

இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இன்று அகமதபாத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட மைதானத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்டின் முதல் நாள் போட்டியை காண்கிறார். 

கடந்த 2021ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட இந்த மைதானம் நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இங்கு இரண்டு போட்டிகளில் இந்திய அணி விளையாடியுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய கணிக்கப்பட்ட அணி விவரம்: 

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஆர் அஷ்வின், முகமது ஷமி, உமேஷ் யாதவ்.

ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், மாட் குஹ்னெமன், நாதன் லியான், டாட் மர்பி.

09:54 AM (IST)  •  13 Mar 2023

முதல் விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணி.. விக்கெட் வேட்டையை தொடங்கிய அஸ்வின்!

35 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்த மேத்யூ குஹ்னெமனை அஸ்வின் எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார். 

17:08 PM (IST)  •  12 Mar 2023

4வது நாள் ஆட்ட நேர முடிவில்..

நான்காவது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 571 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட 88 ரன்கள் பின்தங்கியுள்ளது. 

16:23 PM (IST)  •  12 Mar 2023

உமேஷ் யாதவ் அவுட்..!

9வது விக்கெட்டுக்கு களமிறங்கிய உமேஷ் யாதவ் ஒரு பந்தைக் கூட எதிர் கொள்ளாமல் டைமண்ட் டக் ஆகி வெளியேறியுள்ளார். 

16:19 PM (IST)  •  12 Mar 2023

அஸ்வின் அவுட்..!

8வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அஸ்வின் 12 பந்துகளில் 7 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆகியுள்ளார். 

15:55 PM (IST)  •  12 Mar 2023

அக்‌ஷர் விக்கெட்..!

சிறப்பாக விளையாடி வரும் அக்‌ஷர் பட்டேல் 79 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
"பணத்தை திருப்பி தரல" ஆபீஸ் பார்க்கிங்கில் வைத்து பெண் கொலை.. பட்டப்பகலில் சக ஊழியர் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
"பணத்தை திருப்பி தரல" ஆபீஸ் பார்க்கிங்கில் வைத்து பெண் கொலை.. பட்டப்பகலில் சக ஊழியர் வெறிச்செயல்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
SSC MTS Result 2024: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? காத்திருக்கும் தேர்வர்கள்.!
SSC MTS Result 2024: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? காத்திருக்கும் தேர்வர்கள்.!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Embed widget