![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
சஹாவின் சாகச '60'... 234/7 டிக்ளர் செய்த இந்தியா... நியூசிலாந்து அணிக்கு 284 ரன்கள் இலக்கு..
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் 2 வது இன்னிங்ஸில் 284 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி
![சஹாவின் சாகச '60'... 234/7 டிக்ளர் செய்த இந்தியா... நியூசிலாந்து அணிக்கு 284 ரன்கள் இலக்கு.. India set the target of 284 in the first Test against New Zealand சஹாவின் சாகச '60'... 234/7 டிக்ளர் செய்த இந்தியா... நியூசிலாந்து அணிக்கு 284 ரன்கள் இலக்கு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/28/da146d40069c7f7462e793c699d61dab_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதை தொடர்ந்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில், 63 ரன்கள் முன்னிலையுடன் நான்காவது நாளான இன்று இந்திய அணி ஆட்டத்தை தொடங்கி ஆடி வருகிறது.
இந்திய அணி இன்று தொடக்கம் முதலே அடுத்தடுத்த விக்கெட்களை இழந்து தடுமாறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாயங்க் அகர்வால் 17 ரன்களில் வெளியேற, இந்திய அணியில் தற்போது சுவராக காணப்படும் புஜாராவும் 22 ரன்களில் நடையை கட்டினார்.
தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரஹானே 4 ரன்களில் ஏமாற்றம் அளிக்க, கடந்த இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த ஜடேஜா இந்த முறை ரன் எண்ணிக்கையை தொடங்காமலே அவுட் ஆனார். அதன்பிறகு ஷ்ரேயாஸ் ஐயருடன் அஸ்வின் இணைந்து இந்திய அணியின் எண்ணிக்கையை உயர்த்த நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் ஜெமிசன் வீசிய 39. 2 வது ஓவரில் அஸ்வின் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு புறம் பொறுமையாக விளையாடி 65 ரன்களில் தனது விக்கெட்டை சௌதீயிடம் பறிகொடுத்தார்.
இந்திய அணி 167 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து இருந்தபோது, விருத்திமான் சஹா மற்றும் அக்சர் பட்டேல் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர். தொடர்ந்து இவர்களின் விக்கெட்டை எடுக்க எவ்வளவோ முயற்சித்தும் பந்து வீச்சாளர்கள் சோர்ந்து போக, மறுபுறம் சஹா அரைசதம் அடித்து அசத்தினார்.
இந்தநிலையில், இந்திய அணி 234/7 டிக்ளர் செய்தது. விக்கெட் கீப்பர் சஹா 61 ரன்களுடனும். அக்சர் பட்டேல் 28 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 64 ரன்களும், சஹா 61 ரன்களும் அடித்திருந்தனர். அதேபோல், நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக சௌதீ மற்றும் ஜெமிசன் தலா 3 விக்கெட்களும், அஜாஸ் பட்டேல் 1 விக்கெட்களும் எடுத்து இருந்தனர். தற்போது நியூசிலாந்து அணி 284 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)