மேலும் அறிய

India's Probable Squad: யார் யார் உள்ளே? யார் யார் வெளியே? டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி எப்படி இருக்கும்..?

2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு இந்த ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் வெளியாகும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது.

இந்திய பிரீமியர் லீக் 2024 சீசன் முடிந்ததும், அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் டி20 உலகக் கோப்பை 2024 ஜூன் 1ம் தேதி முதல் தொடங்குகிறது. 

இந்திய அணி பாகிஸ்தானுடன் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு இந்த ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் வெளியாகும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது. இந்திய டி20 அணி ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு வந்திருந்தாலும், ஐபிஎல்லில் வீரர்களில் செயல்பாடு பொறுத்து சில வீரர்கள் சேர்க்கவோ அல்லது நீக்கவோ படலாம். 

இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் பல வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் வருகின்ற ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் தேர்ந்தெடுக்கப்படலாம். இதன் காரணமாக 2024 ஐபிஎல்-ஐ தீவிரமாக கண்காணித்து வருகிறது இந்திய தேர்வுக் குழு. 

யார் யார் உள்ளே! யார் யார் வெளியே? 

யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் போன்ற பல வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஹா போன்ற சில முக்கிய வீரர்கள் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தங்களது பெயரை உறுதி செய்துள்ளன. 

முன்னதாக, இந்திய டி20 கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா விலகப்பட்டு, ஹர்திக் பாண்டியாவுக்கு பொறுப்பு வழங்கப்படும் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிகள் வைக்கும் விதமாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, வருகின்ற டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவே கேப்டனாக செயல்படுவார் என அறிவித்தார். 

விக்கெட் கீப்பராக யார் தேர்வு..?

இந்தியா அணி டி20 உலகக் கோப்பை 2024 அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கான முக்கிய போட்டியாளர்களாக கே.எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் உள்ளனர். விபத்திற்கு பிறகு ஐபிஎல் 2024ல் இதுவரை ரிஷப் பண்ட் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். நேற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கூட அதிரடியாக விளையாடி அரைசதத்தை கடந்தார். எனவே, இந்திய அணி தேர்வில் இவரது பெயர் முக்கிய பங்கு வகிக்கும். இதனிடையே பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இம்பாக்ட் பிளேயராக விளையாடிய கே.எல்.ராகுலின் உடற்தகுதி குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் போன்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை தொடர்ந்து, இந்த பட்டியலில் ஜிதேஷ் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரும் டி20 உலகக் கோப்பை 2024க்கான இந்திய அணியில் தேர்வு பெறுவதற்காக போட்டியிடுகின்றனர்

டி20 உலகக் கோப்பைக்கான கணிக்கப்பட்ட இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் , ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

''திமுக ஆட்சியை அகற்றுவோம்''- ஜெயலலிதா நினைவிடத்தில் சூளுரைத்த ஈபிஎஸ், வழிமொழிந்த அதிமுகவினர்!
''திமுக ஆட்சியை அகற்றுவோம்''- ஜெயலலிதா நினைவிடத்தில் சூளுரைத்த ஈபிஎஸ், வழிமொழிந்த அதிமுகவினர்!
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
மதுரை இளைஞர்களே! தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மிஸ் பண்ணிடாதீங்க
மதுரை இளைஞர்களே! தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மிஸ் பண்ணிடாதீங்க
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Idumbavanam Karthik: ’’அரசியலுக்கு வாங்க..நேருக்கு நேர் மோதுவோம்!’’ இடும்பாவணம் கார்த்திக் சவால்DMK MLA VS People: ’’யாருக்கு வேணும் உன் சோறு..!’’Mla-வை சுத்துப்போட்ட பெண்கள்கடும் வாக்குவாதம்Pushpa 2 | காவு வாங்கிய புஷ்பா 2 நெரிசலில் சிக்கிய தாய் பலி உயிருக்கு போராடும் மகன் | Allu ArjunGovt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''திமுக ஆட்சியை அகற்றுவோம்''- ஜெயலலிதா நினைவிடத்தில் சூளுரைத்த ஈபிஎஸ், வழிமொழிந்த அதிமுகவினர்!
''திமுக ஆட்சியை அகற்றுவோம்''- ஜெயலலிதா நினைவிடத்தில் சூளுரைத்த ஈபிஎஸ், வழிமொழிந்த அதிமுகவினர்!
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
மதுரை இளைஞர்களே! தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மிஸ் பண்ணிடாதீங்க
மதுரை இளைஞர்களே! தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மிஸ் பண்ணிடாதீங்க
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
"நகை வாங்குபவர்கள் தான் டார்கெட்" 2 கிலோ தங்கத்திற்காக கடத்தல்! சிக்கிய கும்பல்!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
Embed widget