Dravid On Rohit: உலகக் கோப்பை தோல்வி - கேப்டன் ரோகித் குறித்து இந்திய அணி பயிற்சியாளர் டிராவிட் சொன்னது என்ன?
Dravid On Rohit: உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில், கேப்டன் ரோகித் சர்மா குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மனம் திறந்து பேசியுள்ளார்.

Dravid On Rohit: ரோகித் சர்மா ஒரு சிறந்த தலைவர் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் பாராட்டியுள்ளார்.
ரோகித்தை புகழ்ந்த டிராவிட்:
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்ற நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் மைதானத்தில் பேட் ஒன்றை அளித்தார். அப்போது, “இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் அற்புதமானது. அவர் எங்களுக்கு தொனியை அமைத்த விதம், நாங்கள் எந்த வழியில் விளையாட வேண்டும் என்பதை எங்களுக்கு உணர்த்தியது. மேலும் நாங்கள் ஒரு நேர்மறையான அட்டாக்கிங் பிராண்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்பினோம். அதை செய்வதில் ரோகித் சர்மா மிகவும் உறுதியாக இருந்தார். ஒரு முன்னுதாரணமாக இருந்து அணியை வழிநடத்த அவர் விரும்பினார். உலகக் கோப்பை முழுவதும் அப்படி தான் செயல்பட்டார். ஒரு வீரராகவும் தலைவராகவும் என்னால் அவரைப் பற்றி அதிகமாக வார்த்தைகளால் கூற முடியாது" என டிராவிட் தெரிவித்தார்.
சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா:
தொடர்ந்து, “ஆஸ்திரேலியா அணி சிறப்பாக பந்து வீசியது. மாலை நேரத்தை காட்டிலும் பிற்பகல் நேரத்தில் பந்து சற்று நின்று வந்தது. பனி இருந்தது என்று மட்டும் கூறமாட்டேன். ஆனால், உண்மையை சொல்ல போனால் பிற்பகல் நேரத்தை காட்டிலும் மாலை நேரத்தில் பந்து பேட்டிங்கிற்கு சாதகமாக வந்தது. நாங்கள் ஸ்ட்ரைக்கை சுழற்றினோம். ஆனால், பவுண்டரிகள் எடுக்க முடியவில்லை.
அணியின் நிலை என்ன?
அந்த டிரஸ்ஸிங் அறையில் நிறைய உணர்ச்சிகள் இருந்தன. ஒரு பயிற்சியாளராகப் அதை பார்ப்பது கடினமாக இருந்தது. ஏனென்றால் உலகக் கோப்பைக்காக அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தார்கள், என்ன செய்தார்கள், செய்த தியாகங்கள் என்பது எனக்கு தெரியும். அதுதான் விளையாட்டு. என்ன வேண்டுமானாலும் நடக்கும். சிறந்த அணி வெற்றி பெற்றது. நாளைக் காலையில் சூரியன் உதிக்கும் என்று நான் நம்புகிறேன். அதிலிருந்து கற்றுக்கொள்வோம். மற்றவர்களைப் போலவே நாமும் சிந்தித்து முன்னேறுவோம்” என டிராவிட் பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

