T20I Ranking: யாரு படம் ஓடினாலும் ஹீரோ நான் தான்; டாப் ஆஃப் த வோர்ல்டில் SKY..!
T20I Ranking: ஐசிசி டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் டி20 பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தினை தக்கவைத்துள்ளார்.
T20I Ranking: ஐசிசி டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் டி20 பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தினை தக்கவைத்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டித் தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் களம் இறங்கும் சூர்ய குமார் யாதவ் ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தினை தக்கவைத்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்திய அணி அரையிறுதிச் சுற்றுடன் வெளியேறிய நிலையிலும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சூர்ய குமார் யாதவ் முதல் இடத்தினை தக்கவைத்துள்ளார். இந்திய அணிக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களுக்கும் உற்சாகத்தினையும் உத்வேகத்தினையும் அளித்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூர்ய குமார் யாதவ் மொத்தம் 239 ரன்கள் விளாசினார். குறிப்பாக தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 40 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார். இது தான் உலகக் கோப்பை தொடரில் இவரது அதிகபட்ச ஸ்கோராக பதிவாகியுள்ளது. இந்திய அணியின் 360 டிகிரி பேட்ஸ்மேன் எனப்படும் சூர்ய குமார் யாதவின் சிறப்பான ஆட்டத்தால் ஏற்கனவே அவர் இருந்த நெம்பர் ஒன் இடத்தினை தக்கவைத்துள்ளார். மேலும், இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்லவில்லை என்றாலும், இந்திய அணியின் வீரர்கள் விராட் கோலி மற்றும் சூர்ய குமார் யாதவ் மற்றும் அர்சிஃப் சிங் என மொத்தம் மூன்று வீரர்கள் இடம் பிடித்திருந்தனர். இதுவே இந்திய அணிக்கு பெரும் உத்வேகமாக அமைந்தது. இந்நிலையில் சூர்ய குமார் யாதவ் தனது ஐசிசி தரவரிசை இடத்தினை தக்கவைத்திருப்பதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும், இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வானும், மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் அணியின் பாபர் அஸாமும் உள்ளனர். நான்காவது இடத்தில் நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் கான்வே உள்ளார். ஐந்தாவது இடத்தில் தென் ஆப்ரிக்காவின் அடென் மார்க்கம் நீடிக்கிறார். ஆறாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் டிவைன் மாலன் நீடிக்கிறார். அதேபோல் ஏழாவது இடத்தில் தென் ஆப்ரிக்காவின் ரிலீ ரோஷோவ் உள்ளார். நியூசிலாந்து அணியின் ஹிலின் பிலிப்ஸ் எட்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபின்ச் ஒன்பதாவது இடத்திலும் நீடிக்கின்றனர். பத்தாவது இடத்தினை ஸ்ரீலங்காவின் பதும் நிஷ்கன்னா தக்கவைத்துள்ளார்.
Top #T20WorldCup performers biggest gainers in the latest @MRFWorldwide ICC Men’s T20I Player Rankings.
— ICC (@ICC) November 16, 2022
Details 👇https://t.co/MKEWVUpZCs
மிகவும் பரபரப்பாக இருந்த டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாகவும் தற்போதும் இருக்கும் தரவரிசைப் பட்டியலில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க,