மேலும் அறிய

IND vs ZIM T20 Innings Highlights: பந்து வீச்சில் மிரட்டிய ரவி பிஷ்னோய்.. இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்கு!

இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 115 ரன்கள் எடுத்துள்ளது. 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.

கடந்த ஜூன் 29 ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி. இதனைத்தொடர்ந்து இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி இன்று (ஜூலை 6) தொடங்கியுள்ளது.

இந்தியா - ஜிம்பாப்வே போட்டி: 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெஸ்லி மாதேவேரே மற்றும் இன்னசெண்ட் கயா ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் இன்னசெண்ட் கயா ஒரு பந்து மட்டுமே களத்தில் நின்று டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வெஸ்லி உடன் பிரையன் பென்னட் ஜோடி சேர்ந்தார்.

இவர்களது ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 15 பந்துகள் வரை களத்தில் நின்ற பிரையன் பென்னட் 5 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 24 ரன்கள் எடுத்து ரவி பிஷ்னோய் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா களம் இறங்கினார். இதனிடையே தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய வெஸ்லி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். 

116 ரன்கள் இலக்கு:

சிக்கந்தர் ராசவுடன் டியான் மியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இவர்கள் நிதானமாக விளையாட சிக்கந்தர் ராசா அப்போது விக்கெட்டை பறிகொடுத்தார். 19 பந்துகள் களத்தில் நின்ற அவர் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 17 ரன்கள் எடுத்தார். இதனைத்தொடர்ந்து களம் இறங்கிய ஜொனாதன் காம்ப்பெல் டக் அவுட் ஆகி வெளியேற அப்போது ஜிம்பாப்வே அணியின் விக்கெட் கீப்பர் கிளைவ் மடாண்டே களம் இறங்கினார்.

இவர் ஆட்டமிழக்காமல் 29 ரன்கள் எடுத்தார். அதேபோல் டியான் மியர்ஸ் 23 ரன்கள் எடுக்க பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு ஜிம்பாப்வே அணி 115 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்ய உள்ளது. இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
Chennai Power Shutdown(09.07.25): சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
Chennai Power Shutdown(09.07.25): சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
Duraimurugan : ‘உயிர் இருக்கும் வரை நானே திமுகவின் பொதுச்செயலாளர்’ ஆவேசமான  துரைமுருகன்..!
‘உயிர் இருக்கும் வரை நானே பொதுச்செயலாளர்’ ஆவேசமான துரைமுருகன்..!
Minister on Buses: பொது வேலைநிறுத்தம்; தமிழ்நாட்டில் நாளை பேருந்துகள் இயங்குமா.? அமைச்சர் கூறுவது என்ன தெரியுமா.?
பொது வேலைநிறுத்தம்; தமிழ்நாட்டில் நாளை பேருந்துகள் இயங்குமா.? அமைச்சர் கூறுவது என்ன தெரியுமா.?
Ramadoss Vs Anbumani: ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
Embed widget