IND vs ZIM: முதல் போட்டியில் வெற்றி.. சாதனைப்பட்டியலில் இணைந்த இந்திய அணி.. என்ன சாதனை தெரியுமா?
ஜிம்பாவே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
![IND vs ZIM: முதல் போட்டியில் வெற்றி.. சாதனைப்பட்டியலில் இணைந்த இந்திய அணி.. என்ன சாதனை தெரியுமா? IND vs ZIM ODI 2022 Indian cricket team creates new record by demolishing Zimbabwe by beating them 10 wickets in First ODI IND vs ZIM: முதல் போட்டியில் வெற்றி.. சாதனைப்பட்டியலில் இணைந்த இந்திய அணி.. என்ன சாதனை தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/19/23ab51a537511f15271c9951acaae3b41660872507516224_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜிம்பாவே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி பங்கேற்றுள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி நேற்று ஹாராரேவில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாவே அணி இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. ஜிம்பாவே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
A brilliant comeback for @deepak_chahar9 as he is adjudged Player of the Match for his bowling figures of 3/27 👏👏#TeamIndia go 1-0 up in the three-match ODI series.#ZIMvIND pic.twitter.com/HowMse2blr
— BCCI (@BCCI) August 18, 2022
190 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் கடந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
அதாவது தொடர்ச்சியாக ஒரு அணிக்கு எதிராக அதிக ஒருநாள் போட்டிகளை வென்று அசத்தியுள்ளது. இந்திய அணி 2013ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஜிம்பாவே அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 13 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்பாக அதிக பட்சமாக இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 12 ஒருநாள் போட்டிகளில் வெற்று பெற்று இருந்தது. தற்போது அந்தச் சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது.
ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியான இந்திய வெற்றிகள்:
13* vs ஜிம்பாவே (2013-22)
12 vs பங்களாதேஷ் (1988-04)
11 vs நியூசிலாந்து (1986-88)
10 vs ஜிம்பாவே (2002-05)
இந்திய அணி ஏற்கெனவே ஜிம்பாவே அணிக்கு எதிராக 2002-05 ஆண்டில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்று இருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது 13 போட்டிகளில் வென்று அசத்தியுள்ளது.
ஒருநாள் போட்டிகளில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற போது தொடக்க ஜோடியின் பார்டனர்ஷிப் :
197/0 vs ஜிம்பாவே (ஷார்ஜா) (1998)
192/0 vs ஜிம்பாவே (ஹராரே) (2022)
126/0 vs ஜிம்பாவே (ஹராரே) (2016)
123/0 vs கிழக்கு ஆஃப்ரிக்கா (லீட்ஸ்) (1975)
116/0 vs வெஸ்ட் இண்டீஸ் (போர்ட் ஆஃப் ஸ்பெயின்) (1997)
114/0 vs இங்கிலாந்து (ஓவல்) (2022)
97/0 vs இலங்கை (ஷார்ஜா) (1984)
91/0 vs கென்யா (ப்ளாம்ஃபோவுன்டேன்) (2001)
இவை தவிர 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய வென்ற போட்டியில் அதிகமாக தொடக்க ஜோடி அடித்த ரன்களில் தவான் - கில் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)