மேலும் அறிய

IND Vs WI: ஜெய்ஷ்வால், ரோகித் மிரட்டல் அடி.. மேற்கிந்திய தீவுகளை அச்சுறுத்தும் இந்தியா..162 ரன்கள் முன்னிலை

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணி அபாரம்:

டொமினிகாவில் நடைபெறும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 70 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கியது. நிலைத்து நின்று ஆடிய முதல் விக்கெட்டிற்கான கேப்டன் ரோகித் சர்மா - ஜெய்ஷ்வால் ஜோடி, தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டது.

ஜெய்ஷ்வால் - ரோகித் சர்மா சதம்:

அறிமுக விரரான ஜெய்ஷ்வால் தனது போட்டியில் அரைசதம் விளாசிய வேகத்திலேயே, சர்வதேச போட்டிகளில் தனது முதல் சதத்தையும் பூர்த்தி செய்தார். மறுமுனையில் ரோகித் சர்மாவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதத்தை பூர்த்தி செய்தார். இதையடுத்து, 103 ரன்கள் எடுத்து இருந்தபோது ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 229 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக, முதல் விக்கெட்டிற்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

2ம் நாள் ஆட்டம் முடிவு:

இதையடுத்து வந்த சுப்மன் கில் வெறும் 6 ரன்களில் நடையை கட்ட, ஜெய்ஷ்வால் உடன் ஜோடி சேர்ந்து கோலி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டம் நாள் ஆட்ட நேரம் முடியும் வரை, இந்த கூட்டணியை மேற்கிந்திய தீவுகள் அணியால் பிரிக்க முடியவில்லை. அதன்படி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்களை சேர்த்துள்ளது. இதனால், முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணியை காட்டிலும், இந்திய அணி 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜெய்ஷ்வால் 143 ரன்களுடனும், கோலி 36 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

முதல் நாள் சுருக்கம்:

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பிறகு, கடந்த ஒரு மாத காலமாக ஓய்வில் இருந்த, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி, டொமினிகாவில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

மளமளவென சரிந்த விக்கெட்டுகள்:

இதையடுத்து, கேப்டன் பிராத்வெயிட் மற்றும் சந்தர்பால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 31 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து, 12 ரன்கள் எடுத்து இருந்தபோது சந்தர்பால்  அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு பயம் காட்டினார். இதனால், 64.3 ஓவர்களுக்கு 150 ரன்களை சேர்ப்பதற்குள் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அதிகபட்சமாக அதனாசே 47 ரன்களை சேர்த்தார். ஹோல்டர் அதனாசே கூட்டணி 6வது விக்கெட்டிற்கு 41 ரன்களை சேர்த்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சுழற்பந்துவீச்சாளர்களான அஷ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதோடு, தாக்கூர் மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.

இந்திய அணி பேட்டிங்:

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய யஷஷ்வி ஜெய்ஷ்வால் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் நாள் முடிவில் 23 ஓவர்கள் விளையாடிய இந்த ஜோடி, இறுதி வரை ஆட்டமிழக்காமல் 80 ரன்களை சேர்த்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Embed widget