IND vs WI T20: கேஎல் ராகுலின் வாழ்க்கையில் விளையாடும் விதி... WI தொடரில் பிசிசிஐ அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி20 அணியில் கேஎல் ராகுலுக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் விளையாடுவார் என பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் மேற்கு இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று இரவு எட்டு மணிக்கு தொடங்கவுள்ளது. ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி ரோகித் தலைமையில் டி20 தொடரையும் வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
அக்டோபரில் தொடங்கவுள்ள டி20 உலககோப்பைக்கு, அங்கீகாரம் பெற்ற அனைத்து அணிகளும் மிகவும் மும்மரமாக தங்களை தயார் செய்து வருகின்றன. இந்திய அணி தொடர்ந்து வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் களமிறங்கி வருகிறது. சமீபத்தில் இங்கிலாந்து உடனான போட்டிகளை முடித்த இந்திய அணி, நாடு திரும்பாமல் மேற்கு இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டது. ஏற்கனவே வங்களாதேசத்துடனான கிரிக்கெட் தொடரினை முடித்துவிட்டு இந்திய அணியுடனான கிரிக்கெட் தொடருக்கு காத்திருந்தது.
NEWS 🚨 - Sanju Samson replaces KL Rahul in T20I squad.
— BCCI (@BCCI) July 29, 2022
More details 👇 #WIvIND | #TeamIndia https://t.co/4LVD8rGTlE
மூன்று ஒருநாள் போட்டி ஐந்து டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே மூன்று ஒருநாள் போட்டிகள் முடிந்த நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி இரவு எட்டு மணிக்கு நடைபெறவுள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்ற நிலையில், டி20 போட்டியிலும் வெற்றிபெற காத்திருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி20 அணியில் கேஎல் ராகுலுக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் விளையாடுவார் என பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. வலது இடுப்பு காயத்திலிருந்து மீண்ட கேஎல் ராகுல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் தேர்வானார். இந்த நிலையில், கேஎல் ராகுலுக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று கண்டறிப்பட்ட நிலையில், தற்போது மருத்துவக்குழுவால் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து கேஎல் ராகுலுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஜூன் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சொந்த தொடரில் கையில் காயம் அடைந்த குல்தீப் இந்த தொடரில் திரும்பியுள்ளார். அதேபோல், கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடருக்கு பிறகு அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
5 டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோஹித் ஷர்மா (கேப்டன்), இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஆர் அஷ்வின், கே.பிஷ்னோ பிஷ்னோ, கே. , புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்