IND vs WI: சூர்யகுமார்-வெங்கடேஷ் அதிரடி.. இதுபோதுமா? 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா !
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி தற்போது கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தத் தொடரை இந்திய அணி ஏற்கெனவே 2-0 என்ற கணக்கில் வென்றுவிட்டது. இதன்காரணமாக கடைசி போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட்(4) மற்றும் இஷான் கிஷன் 34 மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 25 ஆகிய ரன்களில் ஆட்டமிழந்தனர்.
FIFTY!
— BCCI (@BCCI) February 20, 2022
A brilliant half-century from @surya_14kumar. This is his 4th in T20Is.
Live - https://t.co/e1c4fOY0JR #INDvWI @Paytm pic.twitter.com/hJmGkmIt5O
அதன்பின்னர் வந்த கேட்பன் ரோகித் சர்மா 7 ரன்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதன்பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டினார். இவர் 7 சிக்சர்கள் விளாசி 31 பந்துகளில் 65 ரன்கள் அடித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் ஐயர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.
Innings Break!
— BCCI (@BCCI) February 20, 2022
A 37-ball 91-run stand between @surya_14kumar (65) and Venkatesh Iyer 35* powers #TeamIndia to 184/5. 💪 💪
Over to our bowlers now. 👍 👍 #INDvWI | @Paytm Scorecard ▶️ https://t.co/2nbPwMZwOW pic.twitter.com/1QbTNAk0V5
இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் 3-0 என ஒயிட்வாஷ் செய்யும். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரை ஒயிட்வாஷ் செய்த அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெறும். இவை தவிர ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முன்னேறும் வாய்ப்பும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்