மேலும் அறிய

IND Vs WI, 3rd T20 LIVE: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

IND Vs WI, 3rd T20 LIVE: இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை ஏபிபிநாடு தளத்தில் காணலாம்.

LIVE

Key Events
IND Vs WI, 3rd T20 LIVE: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

Background

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் நீடிக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்க உள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம்:

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி,  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. அதைதொடர்ந்து தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. அதில், முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்திய அணி அடுத்தடுத்து தோல்வியுற்றது. இதனால், தொடரில் 2-0 என மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை வகிக்கிறது.

3வது டி-20 போட்டி:

இந்நிலையில் தான் 3வது டி-20 போட்டி, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு புரொவிடன்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற மேற்கிந்திய தீவுகள் அணியும், இன்றைய போட்டியில் வென்று தொடரில் நீடிக்க இளம் இந்திய அணியும் தீவிரம் காட்டி வருகிறது. இதனால், இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றால், 2016ம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணிக்கு எதிராக அந்த அணி வெல்லும் முதல் தொடராக இது இருக்கும்.

இந்திய அணியின் பிரச்னை:

இந்த தொடரில் இந்திய அணியின் முக்கிய பிரச்னையாக இருப்பது பேட்டிங் தான். டாப் ஆர்டரில் களிமிறங்கும் இஷன் கிஷன், சுபமன் கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய இன்னிங்ஸ் எதுவும் ஆடவில்லை. மிடில் ஆர்டரில் களமிறங்கும் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் சஞ்சு சாம்சன் உள்ளிட்டோரும் சொதப்பி வருகின்றனர். இதனால், இன்றைய போட்டியில் வெற்றி பெற மேற்குறிப்பிட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அதேநேரம், இந்த தொடரின் மூலம் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான, திலக் வர்மா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்து வருகிறார்.

பந்துவீச்சு:

இந்திய அணியின் பந்துவீச்சு நன்றாகவே இருந்தாலும் இளம் வீரர் முகேஷ் குமார் அதிகப்படியான ரன்களை வாரி வழங்குகிறார். இதனால் இன்றைய போட்டியில் அவருக்கு பதிலாக ஆவேஷ் கான் அல்லது உம்ரான் மாலிக் இந்திய அணியில் இடம்பெறலாம். அதேபோன்று கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டாலும், 18வது ஓவரை சாஹல் வீசாதது கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. இதனால், இந்த போட்டியில் பந்துவீச்சாளர்களை கேப்டன் பாண்ட்யா முறையாக பயன்படுத்த வேண்டியது கட்டாயம். 

23:47 PM (IST)  •  08 Aug 2023

இந்தியா வெற்றி..!

இந்திய அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இறுதிவரை களத்தில் இருந்த திலக் வர்மா 49 ரன்களும் ஹர்திக் பாண்டியா ரன்களும் அடித்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த தொடரை இன்னும் உயிர்ப்பில் வைத்துள்ளது.

22:51 PM (IST)  •  08 Aug 2023

சூர்யகுமார் யாதவ் அவுட்..!

அதிரடியாக ஆடிவந்த சூர்யகுமார் யாதவ் 83 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

22:43 PM (IST)  •  08 Aug 2023

100 ரன்களைக் கடந்த இந்திய அணி..!

சிறப்பாக ஆடிவரும் இந்திய அணி 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் சேர்த்துள்ளது. 

22:41 PM (IST)  •  08 Aug 2023

மிரட்டும் சூர்யகுமார் யாதவ்..!

இந்திய அனியின் சூர்யகுமார் யாதவ் அதிரடியா ஆடி வருகிறார். 

22:38 PM (IST)  •  08 Aug 2023

வெற்றிப்பாதையில் இந்திய அணி..!

10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் குவித்துள்ளது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
TN Rain: தமிழ்நாட்டில் மழை பெய்யுமா, பெய்யாதா? வானிலை மையம் சொல்வது என்ன.?
TN Rain: தமிழ்நாட்டில் மழை பெய்யுமா, பெய்யாதா? வானிலை மையம் சொல்வது என்ன.?
5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்து: கல்வி அமைச்சர் அறிவிப்பு
5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்து: கல்வி அமைச்சர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
TN Rain: தமிழ்நாட்டில் மழை பெய்யுமா, பெய்யாதா? வானிலை மையம் சொல்வது என்ன.?
TN Rain: தமிழ்நாட்டில் மழை பெய்யுமா, பெய்யாதா? வானிலை மையம் சொல்வது என்ன.?
5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்து: கல்வி அமைச்சர் அறிவிப்பு
5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்து: கல்வி அமைச்சர் அறிவிப்பு
RN Ravi Meets PM Modi : ”ஆளுநர் – பிரதமர் சந்திப்பு – இருவரும் பேசியது என்ன?” வெளிவராத விவரங்கள்..!
RN Ravi Meets PM Modi : ”ஆளுநர் – பிரதமர் சந்திப்பு – இருவரும் பேசியது என்ன?” வெளிவராத விவரங்கள்..!
CA Registration: சிஏ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- ஜன.1 கடைசி- எப்படி?
CA Registration: சிஏ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- ஜன.1 கடைசி- எப்படி?
Pudhumai Penn scheme: அடடே.. இனி இவர்களுக்கும் மாதம் ரூ.1000: டிச.30 முதல் அமல்- விவரம்!
Pudhumai Penn scheme: அடடே.. இனி இவர்களுக்கும் மாதம் ரூ.1000: டிச.30 முதல் அமல்- விவரம்!
DMK Alliance: ஆடிப்போன ஸ்டாலின் ”தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்
DMK Alliance: ஆடிப்போன ஸ்டாலின் ”தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்" கூட்டணி கட்சி போட்ட பழி
Embed widget