IND vs WI 3rd ODI LIVE: 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி...! மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்தியா..!
IND vs WI 3rd ODI Match LIVE Updates: இந்த தொடரை வென்றதன் மூலமாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் எதிராக தொடர்ச்சியாக பெறும் 7வது தொடர் வெற்றி ஆகும்.
LIVE
Background
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அகமாதாபாத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதன்மூலம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், மூன்றவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று மதியம் தொடங்க உள்ளது.
இந்த தொடரை வென்றதன் மூலமாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் எதிராக தொடர்ச்சியாக பெறும் 7வது தொடர் வெற்றி ஆகும். எனினும், ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்க உள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரை, வெஸ்ட் இண்டீஸ் அணியை வையிட் வாஷ் செய்யும் நோக்கத்தில் களமிறங்க உள்ளது.
96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி...! மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்தியா..!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிரடி காட்டும் ஓடீன் ஸ்மித்...! ஆட்டத்தை மாற்றுமா..?
மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் அந்த அணியின் கடைசி கட்ட வீரர் ஓடின் ஸ்மித் தனி ஆளாக அதிரடியாக ஆடி வருகிறார். தற்போது வரை அவர் 14 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 31 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
6 விக்கெட்டுகளை இழந்து மேற்கிந்திய தீவுகள் தடுமாற்றம்...!
இந்தியா நிர்ணயித்த 266 ரன்களை நோக்கி ஆடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 17 ஓவர்களில் அந்த அணி 86 ரன்கள் மட்டுமே எடுத்து ஆடி வருகிறது.
ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி தீபக் சாஹர் அசத்தல்...!
பிரண்டன் கிங்கை ஆட்டமிழக்கச் செய்த அதே ஓவரில் மேற்கிந்திய வீரர் ஷாம்ரா ப்ரூக்சையும் தீபக் சாஹர் ஆட்டமிழக்கச் செய்தார்.
பிரண்டன் கிங்கை ஆட்டமிழக்கச் செய்த தீபக் சாஹர்...! மேற்கிந்திய தீவுகள் 25-2..!
மேற்கிந்திய தீவுகள் அணியின் மற்றொரு தொடக்க வீரர் பிரண்டன் கிங் 14 ரன்கள் எடுத்த நிலையில் தீபக் சாஹர் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.