KL Rahul Century: இந்திய கிரிக்கெட்டின் காந்தாரா.. வெஸ்ட் இண்டீசை வெளுக்கும் ராகுல் சதம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் அபாரமாக ஆடி சதம் விளாசியுள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியை பும்ரா - சிராஜ் தங்கள் வேகத்தால் நிலைகுலைய வைத்தனர். இதனால், 162 ரன்களுக்கு அவர்கள் ஆல் அவுட்டானார்கள்.
ராகுல் அசத்தல்:
இதையடுத்து, நேற்று முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி நேற்றே 2 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 53 ரன்களுடனும், சுப்மன்கில் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து இன்று நடந்த இரண்டாவது நாள் ஆட்டத்தில் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினார்கள்.

அபாரமாக ஆடிய சுப்மன்கில் அரைசதம் விளாசினார். அரைசதம் விாசிய சுப்மன்கில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் சேஸ் சுழலில் அவுட்டானார். அவர் 100 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின்னர், துருவ்ஜோரல் நன்றாக ஒத்துழைக்க மறுமுனையில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் நங்கூரமிட்டார்.
A knock of the highest order! 🔝
— BCCI (@BCCI) October 3, 2025
KL Rahul celebrates a superb Test hundred 🙌
Updates ▶ https://t.co/MNXdZcelkD#INDvWI | @IDFCFIRSTBank | @klrahul pic.twitter.com/Q7r5Xj1sup
அபார சதம்:
அவர் தொடர்ந்து அபாரமாக ஆடி சதம் விளாசினார். அவர் 192 பந்துகளில் 12 பவுண்டரியுடன் இந்த சதத்தை விளாசினார். ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோர் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணிக்கு தூணாக கே.எல்.ராகுல் இருந்து வருகிறார். தனது அனுபவத்தை பயன்படுத்தி இந்திய அணிக்காக பல நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக ஆடி வருகிறார். இங்கிலாந்து தொடரிலும் அவரது பேட்டிங்கில் அது எதிரொலித்தது.
இந்திய அணிக்கு கேப்டனாகவும் பொறுப்பு வகித்த அனுபவம் கொண்ட கே.எல்.ராகுல் 63 டெஸ்ட் பாேட்டிகளில் ஆடி 111 இன்னிங்சில் 3 ஆயிரத்து 789 ரன்கள் எடுத்துள்ளார். 19 அரைசதம் 10 சதங்கள் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 199 ரன்களை எடுத்துள்ளார். விக்கெட் கீப்பர், தொடக்க வீரர்,மிடில் ஆர்டர் என எந்த பணியை கொடுத்தாலும் சிறப்பாக செய்து வருகிறார்.
தொடரும் சிறப்பான ஆட்டம்:
மேலும், 85 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3043 ரன்களையும் எடுத்துள்ளார். அதில் 7 சதங்கள் 18 அரைசதங்கள் அடங்கும். 72 டி20 போட்டிகளி்ல ஆடி 22 அரைசதம், 2 சதங்கள் விளாசியுள்ளார். 145 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 40 அரைசதம், 5 சதங்கள் விளாசியுள்ளார்.

இங்கிலாந்து தொடரிலும் அசத்திய கே.எல்.ராகுல் இந்த தொடரிலும் அசத்தினால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமையும். மேலும், இந்த டெஸ்ட் அணியை அடுத்த தலைமுறைக்கான டெஸ்ட் அணியாகவும் இந்திய அணி நிர்வாகம் கட்டமைத்து வருகிறது. சீல்ஸ், லேய்னே, கீரிவ்ஸ், வாரிகன், பியர்ரே மற்றும் கேப்டன் சேஸ் என 6 பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து பந்துவீசி வருகின்றனர்.
இந்திய அணி இன்றைய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. கே.எல்.ராகுல் 100 ரன்களுடனும், துருவ் ஜோரல் 14 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தொடரை வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மேலும் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக அமையும்.




















