IND vs SL record in T20Is: அதிக ரன்னில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்.. போட்டிகளிலும் அதிக வெற்றி.. முழு ரெக்கார்ட்ஸ் இதோ!
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் இந்திய வீரர்களே அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது. பின்வரும் இரண்டு டி20 போட்டிகள் முறையே புனே மற்றும் ராஜ்கோட்டில் ஜனவரி 5 மற்றும் 7 ம் தேதிகளில் நடைபெறுகிறது. கடைசியாக இரு அணிகளும் துபாயில் டி20 போட்டியில் மோதியபோது, இலங்கை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோல்வியடைய செய்து ஆசிய கோப்பையில் இருந்து வெளியேற்றியது.
டி20 யில் இந்தியா vs இலங்கை இதுவரை ஹெட் டூ ஹெட்
- விளையாடிய போட்டிகள்: 26
- இந்தியா வெற்றி: 17
- இலங்கை வெற்றி: 8
- முடிவு இல்லை: 1
- கடைசி 5 முடிவுகள்: இந்தியா - 3, இலங்கை - 2
இந்தியாவில் நடைபெற்ற இந்தியா vs இலங்கை அணிகள் மோதிய புள்ளி விவரங்கள்:
- விளையாடிய போட்டிகள்: 14
- இந்தியா வெற்றி: 11
- இலங்கை வெற்றி: 2
- முடிவு இல்லை: 1
இதுவரை இந்தியா மற்றும் இலங்கை இடையிலான டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் இந்திய வீரர்களே அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆனால் இன்று தொடங்கும் டி20 தொடர்களில் யாரும் இடம்பெறவில்லை. அதேபோல், இரு அணிகளுக்கும் இடையேயான போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்களில் யுஸ்வேந்திர சாஹல் முதலிடத்தில் உள்ளார்.
இந்தியா VS இலங்கை டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்:
வீரர்கள் | போட்டிகள் | மொத்த ரன்கள் | அதிகபட்ச ரன் |
ரோஹித் ஷர்மா (இந்தியா) | 19 | 411 | 118 |
ஷிகர் தவான் (இந்தியா) | 12 | 375 | 90 |
விராட் கோலி (இந்தியா) | 8 | 339 | 82 |
தசுன் ஷனக (இந்தியா) | 19 | 306 | 74* |
கே.எல் ராகுல் (இந்தியா) | 9 | 301 | 89 |
இந்தியா VS இலங்கை டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள்:
பந்து வீச்சாளர் | போட்டிகள் | விக்கெட்டுகள் | சிறந்த பந்துவீச்சு |
யுஸ்வேந்திர சாஹல் (IND) | 10 | 20 | 4/23 |
துஷ்மந்த சமீர (SL) | 15 | 16 | 2/14 |
ஆர். அஸ்வின் (IND) | 7 | 14 | 4/8 |
குல்தீப் யாதவ் (IND) | 9 | 12 | 3/52 |
தசுன் ஷனக (SL) | 19 | 12 | 3/16 |
இந்தியா உத்தேச அணி: இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்.
இலங்கை உத்தேச அணி: பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா, சாரித் அசலங்கா, ராஜபக்சே, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, தீக்ஷனா, தில்ஷன் மதுஷன்கா, லாஹிரு குமாரா.