Watch Video: புதிய கேப்டன் சூர்யகுமார்.. பதட்டத்தில் இருந்த ரசிகர்கள்! ஜில் செய்த ஹர்திக் பாண்டியா
இந்திய டி20 அணியின் புதிய கேப்டான பொறுப்பேற்ற சூர்ய குமார் யாதவிடம் தனது அன்பை பகிர்ந்துள்ளார் ஹர்திக் பாண்டியா.
இலங்கையில் நடைபெறும் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்கு இந்திய அணி நேற்று கொழும்பு சென்றது.
இந்தியா - இலங்கை:
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இந்திய டி20 அணியின் கேப்டனாக புதிய பொறுப்பை ஏற்றுள்ள சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளராக புதிதாக பொறுப்பேற்ற கவுதம் கம்பீருக்கும் முதல் தொடர் என்பதால் ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சூர்யகுமாரை வாழ்த்திய ஹர்திக் பாண்டியா:
முன்னதாக டி20 உலகக் கோப்பையின் போது துணைக்கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா தான் இந்த முறை கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமித்த பிசிசிஐ துணைக்கேப்டன் பொறுப்பில் இருந்தும் ஹர்திக்கை நீக்கியது. ஹர்திக் ஏன் நீக்கப்பட்டார் என்பது தொடர்பான விளக்கத்தையும் பிசிசிஐ அறிவித்தது.
Mumbai to Pallekele via Colombo ✈️ 🚌#TeamIndia have reached Sri Lanka 🇱🇰#SLvIND pic.twitter.com/ffDYJOV7wm
— BCCI (@BCCI) July 22, 2024
இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் கொழும்பு சென்றடைந்தனர். இந்த வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் நட்பு பாராட்டியது தெரிய வந்துள்ளது. புதிதாக கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள சூர்யகுமார் யாதவிற்கு ஹர்திக் பாண்டியாவுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
hardik hugging suryakumar yadav pure hug not forced hug that time to rohit muy man is sequare person 🥵❤️ pic.twitter.com/X1N6kBONTR
— 𝘼𝙡𝙗𝙚𝙧𝙩 (@ImAlbert_45) July 23, 2024
ஹர்திக் பாண்டியாவின் இந்த செயல் ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது. இந்திய அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் எந்த பொறாமையும் இல்லாமல் விளையாடுவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று கூறிவருகின்றனர்.
மேலும் படிக்க: Paris Olympics 2024:அன்று வெள்ளி வென்ற வீராங்கனை.. பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மீரா பாய் சானு!
மேலும் படிக்க: Paris Olympics 2024:பாரீஸ் ஒலிம்பிக்..தங்கம் வெல்ல காத்திருக்கும் லோவ்லினா போர்கோஹைன் மற்றும் நிகத் ஜரீன்!