IND vs SL Asia Cup: இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த அஸ்வின்.! ஆதிக்கத்தை நிலைநாட்டுவாரா..?
ஆசிய கோப்பையில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். இதனால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
துபாய் மைதானத்தில் இந்திய அணியும், இலங்கை அணியும் சூப்பர் 4 போட்டியில் இன்று நேருக்கு நேர் மோதி வருகின்றன. இந்த தொடரில் இந்திய அணியில் அனுபவ வீரர் அஸ்வின் இடம்பெற்றாலும் அவருக்கு ஆடும் லெவனில் இடம்கிடைக்காமலே இருந்தது.
லீக் போட்டிகளில் பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படாத சூழலில், பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் பிரதான ஆல்ரவுண்டராக களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அந்த போட்டியில் அஸ்வின் இல்லாதது பாகிஸ்தான் அணிக்கு பலமாக அமைந்துவிட்டது.
ASIA CUP 2022. India XI: R Sharma (c), KL Rahul, V Kohli, S Yadav, R Pant (wk), H Pandya, D Hooda,
— BCCI (@BCCI) September 6, 2022
B Kumar, Y Chahal, A Singh, R Ashwin. https://t.co/TUBwEe7urA #INDvSL #AsiaCup2022
இந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் இடம்பெற்றிருந்த பிஷ்னாய் வெளியில் அமரவைக்கப்பட்டு அவருக்கு பதிலாக அஸ்வின் அணியில் இடம்பெற்றுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம்பிடித்துள்ள அஸ்வின் இந்த போட்டியில் தனது மாயாஜல சுழற்பந்துவீச்சு மூலமாக இலங்கை அணிக்கு குடைச்சல் கொடுப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
அனுபவம் வாய்ந்த அஸ்வின் இதுவரை 55 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடி 64 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிறந்த ஆல்ரவுண்டரான அஸ்வின் டி20களில் 146 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக டி20 போட்டியில் அதிகபட்சமாக 31 ரன்களை எடுத்துள்ளார்.
ASIA CUP 2022. Sri Lanka XI: D Shanaka (c), P Nissanka, K Mendis (wk), C Asalanka, D Gunathilaka, B Rajapaksa, W Hasaranga, C Karunaratne, M Theekshana, A Fernando, D Madushanka.https://t.co/TUBwEe7urA #INDvSL #AsiaCup2022
— BCCI (@BCCI) September 6, 2022
இலங்கைக்கு எதிரான இன்றைய முக்கிய போட்டியில் இந்திய அணியில் ரோகித்சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், தீபக்ஹூடா, ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், புவனேஷ்குமார், சாஹல், அர்ஷ்தீப்சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணி தற்போது வரை 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இலங்கை அணியில் கேப்டன் தசுன் சனகா, நிசங்கா, குசல் மெண்டிஸ், அசலங்கா, குணதிலகா, ராஜபக்சே, ஹசரங்கா, கருணரத்னே, தீக்ஷனா, பெர்னாண்டோ, மதுஷனகா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
மேலும் படிக்க : IND vs SL Asia Cup: கட்டாய வெற்றி நெருக்கடியில் களமிறங்கும் இந்தியா! இன்றைய போட்டியில் தோற்றால் என்னவாகும்..?
மேலும் படிக்க : IND vs SL, Asia Cup LIVE: விராட்கோலி போல்ட்..! டக் அவுட்டாகி அதிர்ச்சி...!