மேலும் அறிய

IND Vs SL, 2nd ODI: முதல் வெற்றி யாருக்கு? இந்தியா - இலங்கை இடையே இன்று 2வது ஒருநாள் போட்டி..!

IND Vs SL, 2nd ODI: இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

IND Vs SL, 2nd ODI: இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்திய - இலங்கை ஒருநாள் தொடர்:

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, சூர்யகுமார் தலைமையில் டி20 தொடரை 3-0 என கைப்பற்றி அசத்தியது. அதைதொடர்ந்து தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் இருந்தபோது, யாருமே எதிர்பாராத விதமாக போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்தியா Vs இலங்கை - 2வது ஒருநாள் போட்டி:

இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி, கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. போட்டியின் நேரலையை சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், சோனி லைவ் ஒடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இன்றைய போட்டியில் வென்று தொடரில் முன்னிலை பெற, இரு அணிகளும் தீவிரம் காட்டுவதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் பலம், பலவீனங்கள்:

முதல் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் விளாசி, வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தார். ஆனால், அவரை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடி ரன் சேர்க்க தவறினர். அதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது.  எனவே, கோலி, கில், கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இன்றைய போட்டியில் ரன் குவிக்க வேண்டியது அவசியம். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ரன் சேர்த்தால் மட்டுமே இந்திய அணியின் வெற்றி உறுதியாகும். சிராஜ் மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோர் பந்துவீச்சில் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

நேருக்கு நேர்:

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 169 முறை மோதியுள்ளன. அதில், இந்தியா 99 போட்டிகளிலும், இலங்கை 57 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 12 போட்டிகளில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

மைதானம் எப்படி?

கொழும்பு பிரேமதாசா மைதானம் தொடக்கத்தில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும்.  இருப்பினும், நேரம் செல்ல செல்ல பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்குகின்றனர். இதனால், சேஸிங் செய்வது இந்த மைதானத்தில் கடினமான செயலாக உள்ளது. இதனை முதல் போட்டியிலேயே காண முடிந்தது. எனவே டாஸ் வெல்லும் அணி, முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும். 

உத்தேச அணிகள் விவரம்:

இந்தியா: ரோகித் சர்மா (கே), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா

இலங்கை: சரித் அசலங்க (கே), அவிஷ்க பெர்னாண்டோ, பாத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், அகில தனஞ்சய, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, மதீஷ பத்திரன, மஹீஷ் தீக்ஷனா, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Embed widget