IND vs SL, 1st ODI: 98 ரன்னில் அவுட்டான இலங்கை கேப்டன்; அப்பீலை திரும்பக்கேட்டு சதம் அடிக்கவிட்டு அழகு பார்த்த இந்திய கேப்டன்..!
IND vs SL, 1st ODI: இலங்கை அணியின் கேப்டன் ஷனகா 98 ரன்னில் இருந்தபோது அவுட் செய்யப்பட்ட நிலையில் அப்பீலை திரும்ப கேட்டு ஷனகாவை சதமடிக்க காரணமான ரோகித் ஷர்மாவை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
IND vs SL, 1st ODI: இலங்கை அணியின் கேப்டன் ஷனகா 98 ரன்னில் இருந்தபோது அவுட் செய்யப்பட்ட நிலையில் அப்பீலை திரும்ப கேட்டு ஷனகாவை சதமடிக்க காரணமான ரோகித் ஷர்மாவை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கவுகாத்தியின் பரஸ்பரா மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் விராட்கோலியின் அபார சதம், சுப்மன்கில் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் அரைசதங்களின் உதவியால் இந்திய அணி 373 ரன்களை குவித்தது.
இதையடுத்து, இமாலய இலக்கை நோக்கி இலங்கையின் ஆட்டத்தை பதும் நிசங்கா – பெர்னாண்டோ தொடங்கினர். பெர்னாண்டோ 5 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த குசல் மெண்டிஸ் டக் அவுட்டாகினார். அடுத்து வந்த அசலங்கா நிதானமாக ஆடினார். ஆனாலும், அவரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.
64 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணிக்காக நிசங்கா – டி சில்வா ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து நிதனமாக ஆடினார். நிசங்கா பொறுப்புடன் ஆடி அரைசதம் விளாசினார். அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு அளித்த டி சில்வா அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த நிலையில் 40 பந்துகளில் 47 ரன்களில் அவுட்டானார்.
அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் சிறப்பாக ஆடி வந்த நிசங்கா 72 ரன்களில் அவுட்டானார். அடுத்து இலங்கை கேப்டன் சனகா களமிறங்கினார். மறுமுனையில் ஆல் ரவுண்டர் ஹசரங்கா 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இளம் வீரர் வெல்லாலகே டக் அவுட்டாகினார். பின்னர், சனகாவிற்கு ஒத்துழைப்பு அளித்த கருணரத்னே 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இலங்கை அணிக்காக கடைசி வரை போராடிய சனகா அபாரமாக சதம் அடித்தார். அவர் ஆட்டமிழக்காமல் 108 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணியின் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்துவீசி 8 ஓவர்கள் வீசி 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது சிராஜ் சிறப்பாக வீசி 7 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல் மற்றும் சாஹல் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
India Being India. @ImRo45 Did The Right Thing In The End. #Mankad #IndiaVsSriLanka @dasunshanaka1 Well Deserved 100. @OfficialSLC @BCCI #Cricket pic.twitter.com/Q1r24YMgdq
— Shohan Bowala (@shohanb) January 10, 2023
இலங்கை அணியின் கேப்டன் தசன் சனாகா யாரும் சரியாக ஒத்துழைப்பு அளிக்காததால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 306 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியில் சனகா 88 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 108 ரன்கள் எடுத்திருந்தார். ரஜிதா 9 ரன்கள் எடுத்திருந்தார். 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் கடைசி ஓவரில் மிகவும் சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றது. அதாவது போட்டியின் கடைசி ஓவரினை முகமது ஷமி வீசினார். அந்த ஓவரின் 4வது பந்தை இலங்கை அணியின் ரஜிதா எதிர் கொண்டார். அப்போது நான் - ஸ்டைரைக்கர் பக்கத்தில் நின்றிருந்த இலங்கை அணியின் கேப்டன் ஷனகா கிரீஸை விட்டு வெளியேற, பந்து வீச ஓடிவந்த முகமது ஷமி பந்தை டெலிவரி செய்யாமல், ஷனகாவை அவுட் செய்து விட்டு களநடுவரிடம் அப்பீல் செய்தார். அப்போது ஷனகா 98 ரன்களில் இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஷனகா மற்றும் இலங்கை வீரர்கள் என்ன செய்வதென தெரியாமல் முழிக்க, உடனே இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா, முகமது ஷமியிடம் பேசி அப்பீலை திரும்ப பெற கூறினார். இதனால், ஷமியும் அப்பீலை திரும்ப கோரினார். நான்காவது பந்தினை ரஜிதா சிங்கிள் தட்டி விட, அடுத்த இரண்டு பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி 88 பந்தில் 108 ரன்கள் விளாசி சதம் அடித்தார். ரோகித் ஷர்மா அப்பீலை திரும்ப பெற வைத்ததால் தான் ஷனகா இலங்கை அணிக்கு நம்பிக்கை அளிக்கும் சதத்தினை விளாச முடிந்தது. ரோகித்தின் இந்த செயலை அனைவரும் சிறந்த ஸ்போர்ட்ஸ் மேன் ஷிப் என கூறி பாராட்டி வருகின்றனர்.