Ind vs Sa: சொதப்பும் பிரசித் கிருஷ்ணா... ஃபயருடன் பவுமா பாய்ஸ்.. தொடரை கைப்பற்றுமா இந்தியா?
விசாகப்பட்டினம் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். எனவே, அணிக்கு பேட்டிங்கை வலுப்படுத்தவும் , பவுலிங்கில் ஆறாவது ஆப்ஷனாக உதவக்கூடிய நிதிஷ் ரெட்டியை சேர்ப்பது இந்திய அணிக்கு பலமாகும்

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா இடையேயான ஒருநாள் தொடர் இன்று விசாகப்பட்டினத்தில் நடைப்பெறவுள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் என்பதால் இரு அணிகளுக்கும் Do or Die) போட்டியாக அமையவுள்ளது.
முதல் போட்டியில் வென்ற பிறகு, இந்தியா இரண்டாவது ஒருநாள் போட்டியில் படுதோல்வியைச் சந்தித்தது. தென் ஆப்ரிக்கா 359 ரன்கள் என்ற பெரிய இலக்கை இலகுவாக சேஸ் செய்தது
பௌலிங் தான் பெரிய கவலை!
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பௌலர்கள் மொத்தமாக சொதப்பினர். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 8.2 ஓவர்களில் 85 ரன்களை வாரி வழங்கினார், ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இந்தத் தொடர் முழுவதும் அவரது பவுலிங் சுமாராகவே உள்ளது. தொடர்ந்து ரன்களைக் கொடுத்து, எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாததால், தேர்வாளர்களும் அணி நிர்வாகமும் இப்போது மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தொடரை தீர்மானிக்கும் இந்தப் போட்டியில் பிரசித் கிருஷ்ணாவை அணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
என்ன மாற்றங்கள் வரலாம்?
கிடைத்திருக்கும் தகவலின்படி, அவருக்குப் பதிலாக இளம் ஆல்ரவுண்டரான நிதீஷ் குமார் ரெட்டியை ப்ளேயிங் லெவனில் சேர்க்க வாய்ப்புள்ளது. நிதீஷ் ரெட்டி உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமான ஃபார்மில் உள்ளார். டெத் ஓவர்களில் வேகமாக ரன்களைக் குவிப்பதுடன், விக்கெட்டுகளை எடுக்கும் திறமையும் அவரிடம் உள்ளது.
விசாகப்பட்டினம் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். எனவே, அணிக்கு பேட்டிங்கை வலுப்படுத்தவும் , பவுலிங்கில் ஆறாவது ஆப்ஷனாக உதவக்கூடிய ஒரு ஆல்ரவுண்டர் தேவை. கடந்த இரண்டு போட்டிகளிலும் கடைசி ஓவர்களில் ரன் எடுப்பதில் இந்திய அணி சிரமப்பட்டுள்ளது. இச்சூழலில், நிதிஷ் ரெட்டியை சேர்ப்பது இந்திய பேட்டிங்கிற்கு பலம் அளித்து, அணியின் சமநிலையையும் மேம்படுத்தும்.
பௌலிங் வரிசையில் மாற்றங்கள்
பிரசித் கிருஷ்ணாவை நீக்கினால், பௌலிங் யூனிட் பின்வருமாறு அமையலாம்: அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், மற்றும் ஆறாவது பௌலராக நிதீஷ் ரெட்டி. இந்த காம்பினேஷன் அணிக்கு பேட்டிங் மற்றும் பௌலிங் பிரிவுகளில் ஸ்திரத்தன்மையை அளிக்கும்.
உத்தேச அணி:
ரோஹித் சர்மா,யஷஸ்வி ஜெய்ஸ்வால்,விராட் கோலி,ருதுராஜ் கெய்க்வாட்,வாஷிங்டன் சுந்தர்,கே.எல். ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்),நிதீஷ் குமார் ரெட்டி,ரவீந்திர ஜடேஜா,ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ்,அர்ஷ்தீப் சிங்
நேரலையில் பார்ப்பது எப்படி?
- நேரடி ஒளிபரப்பு (லைவ் ஸ்ட்ரீமிங்) JioHotstar ஆப் மற்றும் இணையதளம்
- தொலைக்காட்சி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்கள்
- போட்டி தேதி & நேரம் இந்திய நேரப்படி (IST) மதியம் 1:30 மணிக்குடாஸ் நேரம் இந்திய நேரப்படி (IST) மதியம் 1:00 மணிக்கு





















