(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs SA: Watch video: முட்டை எடுத்த புஜாராவை தட்டிக்கொடுத்த டிராவிட்: இந்திய அணி கண்ட புதுமை கோச்!
2021 ம் ஆண்டு 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய புஜாரா 6 அரை சதங்கள் உட்பட 28.58 சராசரியில் 686 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பூங்காவில் தொடங்கிய தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வலது கை பேட்ஸ்மேன் புஜாரா கோல்டன் டக் செய்த பிறகு, இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், புஜாராவை திட்டாமல் முதுகில் தட்டிக் கொடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரன் அடிக்க வேண்டிய நெருக்கடியில் புஜாராவும், அஜிங்க்யா ரஹானேவும் அணியில் தேர்வாகியுள்ளனர். புஜாரா கடந்த 2019 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் 193 ரன்கள் அடித்தார்.
அதன்பிறகு களமிறங்கிய போட்டிகளில் ஒரு டெஸ்ட் சதத்தை கூட அடிக்கவில்லை, மேலும், புஜாரா 2020-21 இல் ஆஸ்திரேலியாவில் 2-1 டெஸ்ட் தொடரை வென்ற தொடரில் கூட ஒரு அரைசதத்தை மட்டுமே கடந்திருந்தார்.
அதேபோல், 2021 ம் ஆண்டு 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய புஜாரா 6 அரை சதங்கள் உட்பட 28.58 சராசரியில் 686 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
நேற்று போட்டியின்போது புஜாரா தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர் லுங்கி என்கிடியின் இன்ஸ்விங்கர் அவரது பேட்டின் உள் முனையில் பட்டு ஷார்ட் லெக்கில் இருந்த கீகன் பீட்டர்சனிடம் கேட்சாகி கோல்டன் டக்கில் வெளியேறினார். இருப்பினும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட், செஞ்சூரியனில் உள்ள டிரஸ்ஸிங் ரூமில் உள்ள வாசலில் டக் அவுட்டான புஜாராவின் முதுகில் தட்டி உற்சாகம் கொடுத்தார். இந்த வீடியோ காட்சியை கண்ட இந்திய ரசிகர்கள் டிராவிட்டின் செயலை கண்டு சிலிர்த்து வருகின்றனர்.
#SAvIND pic.twitter.com/SpMO6RtccL
— Ashwin Natarajan (@ash_natarajan) December 26, 2021
இந்த போட்டியில் புஜாரா டக் அவுட் ஆனது மூலம் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 3-வது இடத்தில் பேட்டிங் செய்யும் போது, அதிக முறை டக் அவுட் முறையில் ஆட்டமிழந்த இந்திய வீரர் திலீப் வெங்சர்காரை என்ற மோசமான சாதனையை புஜாரா முறியடித்துள்ளார் புஜாரா இதுவரை 9 முறை டக் அவுட் ஆகி 3வது இடத்தில் உள்ளார்.
இந்தியா அணி சார்பில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 வது இடத்தில் களமிறங்கி அதிக முறை டக் அவுட் :
- சேதேஷ்வர் புஜாரா - 9 முறை
- திலீப் வெங்சர்க்கார் - 8 முறை
- ராகுல் டிராவிட் - 7 முறை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்