Team India ODI Squad: கொரோனாவால் பறிபோன வாய்ப்பு: சோகத்தில் வாஷிங்டன் சுந்தர்... மாற்று வீரரை அறிவித்த பிசிசிஐ
தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில், ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விலகியதால், கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டார். துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டார்.
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தென்னாப்ரிக்காவுடனான ஒரு நாள் தொடரில் அவர் பங்கேற்பதில் சந்தேகம் இருந்தது. இந்நிலையில், அவருக்கு பதிலாக இந்திய அணியில் இணைய இருக்கும் வீரர்களின் பெயரை பிசிசிஐ அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விலகியதால், அகில இந்திய மூத்த தேர்வுக் குழு, ஒருநாள் தொடருக்கான கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டார். துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டார். மேலும், ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஷிகார் தவான், சாஹல் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டனர்.
NEWS - Jayant Yadav & Navdeep Saini added to ODI squad for series against South Africa.
— BCCI (@BCCI) January 12, 2022
More details here - https://t.co/NerGGcODWQ #SAvIND pic.twitter.com/d14T9j3PgJ
வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவருக்கு பதிலாக ஜெயந்த் யாதவை மாற்று வீரராக களமிறக்கியுள்ளது பிசிசிஐ. மேலும், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் சிராஜ் விரைவில் குணமடைந்து ஒரு நாள் தொடரில் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும், பேக்கப் வீரராக நவ்தீப் சைனி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அணியின் விவரம்:
கே.எல். ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சாஹல், ரவிச்சந்திரன் அஷ்வின், பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்.
அப்டேட்: வாஷிங்கடன் சுந்தருக்கு பதிலாக ஜெயந்த் யாதவ், கூடுதல் வீரராக நவ்தீப் சைனி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்