INDvsSA, 2nd Test, Day 2: சாவு பயத்தை காமிக்கிறான் பரமா... அல்லுவிடும் தென் ஆப்பிரிக்கா வீரர்கள்... அசால்ட் காட்டும் ஷர்துல் தாக்கூர்...!
IND vs SA, 2nd Test: விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் திணறி கொண்டிருக்க, அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை எடுத்து தென்னாப்ரிக்காவுக்கு ப்ரேக் போட்டார் ஷர்துல் தாகூர்.
IND vs SA, 2nd Test, Wanderers Stadium: தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. கேப்டன் கே.எல்.ராகுல் 50 ரன்களும், ரவிச்சந்திரன் அஷ்வின் 46 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் சரியாக விளையாட வில்லை இதனால் இந்திய அணி 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்தது. அதனை அடுத்து தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில், தென்னாப்ரிக்க அணி வீரர்கள் டீன் எல்கரும், கீகன் பெட்டர்சனும் களத்தின் நின்று நிதானமாக ரன் குவித்தனர். விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் திணறி கொண்டிருக்க, ஷர்துல் தாகூர் களத்தில் இறங்கினார்.
Elgar and Petersen played well throughout until it was Shardul Thakur's time to shine with three late wickets - another intriguing session of Test cricket 👏#SAvIND
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 4, 2022
உணவு இடைவெளிக்கு முன்பு, ஷர்துல் தாகூரின் துல்லிய பந்துவீச்சால் தென்னாப்ரிக்காவுக்கு ரன் சேர்த்து கொண்டிருந்த டீன் எல்கர் (28) அவுட்டாகினார். அவரை அடுத்து, பெட்டர்சனும் (62), வான் டெர் டுசனும் (1) அவுட்டாகினர். இதனால், அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை எடுத்து தென்னாப்ரிக்காவுக்கு ப்ரேக் போட்டார் ஷர்துல் தாகூர். இதனால், இரண்டாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவெளியின்போது 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருக்கிறது தென்னாப்ரிக்க அணி.
ஏற்கெனவே கேப்டன் விராட் கோலி இல்லாதது அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் காயம் காரணமாக சிராஜ் பங்கேற்காது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது. எனினும், நிதானமாக நின்று விளையாடி வந்த தென்னாப்ரிக்காவுக்கு பிரேக் போட்டிருக்கும் இந்திய அணி, தொடர்ந்து ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை எடுக்கும் முனைப்பில் அடுத்த செஷனில் களமிறங்க உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்