Ind vs SA, 1st Innings Highlights: சாதனை நாயகனானார் ஷர்துல்; வெறும் 27 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா - ஓடவிட்ட இந்தியா...!
IND vs SA, 2nd Test, Wanderers Stadium: ஷர்துல் தாகூர் 7 விக்கெட்டுகள் எடுக்க, ஷமி 2 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் எடுக்க, முதல் இன்னிங்ஸில் 229 ரன்கள் எடுத்திருக்கிறது தென்னாப்ரிக்க அணி.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷர்துல் தாகூரின் 7 விக்கெட் வேட்டையில், முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தென்னாப்ரிக்கா அணி 229 ரன்கள் குவித்திருக்கிறது. இதனால், வெறும் 27 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது தென்னாப்ரிக்கா.
ஜோஹனஸ்பெர்க் மைதானத்தில் தொடங்கிய இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்தது. அதனை அடுத்து தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில், ஷர்துல் தாகூர் 7 விக்கெட்டுகள் எடுக்க, ஷமி 2 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் எடுக்க, முதல் இன்னிங்ஸில் 229 ரன்கள் எடுத்திருக்கிறது தென்னாப்ரிக்க அணி.
தென்னாப்பிரிக்கா மண்ணில் மிகச்சிறந்த பந்துவீச்சை ஷர்துல் தாகூர் (7/61) பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பு, கடந்த 2011-ம் ஆண்டு ஹர்பஜன் சிங்கின் (7/120) பந்துவீச்சே தென்னாப்ரிக்க மண்ணில் இந்திய பவுலரின் சிறந்த பந்துவீச்சாக இருந்தது. அந்த சாதனையை தற்போது முறியடித்திருக்கிரார் ஷர்துல் தாகூர். அதுமட்டுமின்றி, தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெருகிறார்.
.@imShard is now the only 🇮🇳 pacer to have taken seven wickets in an innings against South Africa 🔥 #SAvIND
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 4, 2022
தென்னாப்ரிக்கா பேட்டர்களைப் பொருத்தவரை, டீன் எல்கரும் (28), கீகன் பெட்டர்சன் (62) ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் சேர்த்தனர். அவர்களை அடுத்து, பவுமா தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். மற்ற பேட்டர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில், 27 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருக்கிறது தென்னாப்ரிக்கா அணி. இரண்டாவது நாள் ஆட்டம் இன்னும் முடியாத நிலையில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்