மேலும் அறிய

Ind vs SA, 2nd ODI: சிம்ப்ளி வேஸ்ட்... சொதப்பிய இந்தியா... ஒரு நாள் தொடரையும் தட்டிப்பறித்த தென்னாப்ரிக்கா

2 போட்டிகளை வென்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது தென்னாப்ரிக்க அணி.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில், பார்ல் நகரில் நடைபெற்ற முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளையும் இழந்து ஒரு நாள் தொடரையும் இழந்துள்ளது.

முதல் ஒருநாள் போட்டியிலும் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதனை அடுத்து அதே பார்ல் மைதானத்தில் இன்று மதியம் இரண்டாவது ஒரு நாள் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ராகுல், பேட்டிங் தேர்வு செய்தார். அதனை அடுத்து இந்திய பேட்டர்கள் களமிறங்கினர். சிறப்பாக தொடங்கிய இந்திய அணிக்கு, 63 ரன்கள் எடுத்திருந்தபோது ஷிகர் தவன் அவுட்டாகினார். கடைசி போட்டியில் அரை சதம் கடந்திருந்த அவர், இந்த போட்டியில் 22 ரன்களுக்கு வெளியேறினார். அவரை அடுத்து களமிறங்கிய கோலி, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், டக் அவுட்டாகி வெளியேறினார். நிதானமாக விளையாடி கொண்டிருந்த ராகுலுடன் கைக்கோர்த்த பண்ட், ரன்களை குவித்தார். அரை சதம் கடந்து ராகுலும் அவுட்டாக, பண்ட் மட்டும் களத்தில் நின்று 85 ரன்கள் சேர்த்தார். இதனால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது.

முதல் ஒரு நாள் போட்டியில் சொதப்பியதை போல, இந்த போட்டியிலும் ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு வெளியேறினார். இந்திய அணிக்கு 6வது விக்கெட் சரியும்போது 239 ரன்கள் எட்டி இருந்தது. 250-ஐ கடக்கவே திணறும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய போட்டியிலும் தாகூர் ரன் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தாகூர் 40* எடுக்க, அஷ்வின் 25* ரன்கள் எடுக்க, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 287 ரன்கள் குவித்தது.

தென்னாப்ரிக்கா சேஸிங்:

இந்திய அணி 287 ரன்களை எட்டியபோது, இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்தது. இந்த இலக்கை தென்னாப்ரிக்காவை எடுக்கவிடாமல் தடுத்துவிடலாம் என்று. ஆனால், நடந்தது வேறு. தென்னாப்ரிக்க அணி 132 ரன்கள் எட்டியது வரை ஒரு விக்கெட் கூட விழவில்லை. இந்திய பந்துவீச்சாளர்களின் முயற்சி போதுமானதாக இருக்கவில்லை. தென்னாப்ரிக்க அணி பேட்டர்களும் நிதானமாகவே ஆடினர். ஓப்பனர் மாலன் 91 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ரா வீசிய ஓவரில் அவுட்டானார். 

மற்றொரு ஓப்பனராக டி காக் 78 ரன்கள் எடுக்க, ஓப்பனர்களின் அசத்தல் பார்ட்னர்ஷிப்பில் தென்னாப்ரிக்கா இலக்கை எளிதாக சேஸ் செய்தது. ஒன் டவுன் களமிறங்கிய பவுமா 30+ ரன்கள் எடுக்க, மார்க்கரமும், வான் டர் டுசனும் போட்டியை முடித்து வைத்தனர். இதன் மூலம், 2 போட்டிகளை வென்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது தென்னாப்ரிக்க அணி.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
Embed widget