IND vs SA 1st T20 : இந்திய அணியின் இரண்டாவது இளம் கேப்டன்.. புது சாதனை புக்கில் இடம்பிடித்த பண்ட்!
இந்திய அணியை வழிநடத்தும் இரண்டாவது இளம் வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் கேப்டனாக களமிறங்கி புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.
நேற்று, ஏற்கனவே இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட கேஎல் ராகுல், இடுப்பு காயம் காரணமாக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து விலகினார். இதையடுத்து பண்ட் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
South Africa have won the toss and elect to bowl first against #TeamIndia
— BCCI (@BCCI) June 9, 2022
Live - https://t.co/lJK64Efzvg #INDvSA @Paytm pic.twitter.com/etrIPIa0Rv
இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. இங்கு டாஸ் போட்டதன் மூலம் இந்திய அணியை வழிநடத்தும் இரண்டாவது இளம் வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.
ரிஷப் பந்த் டி20யில் இரண்டாவது இளம் இந்திய கேப்டன்
- ரெய்னா -23 வயது 197 நாட்கள்
- ரிஷப் பந்த் - 24 வயது 249 நாட்கள்
- எம்எஸ் தோனி- 26வயது 68 நாட்கள்
24 ஆண்டுகள் மற்றும் 248 நாட்களில், டி20 சர்வதேச போட்டிகளில் இரண்டாவது இளம் இந்திய கேப்டன் என்ற பெருமையை பண்ட் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா 2010 இல் ஜிம்பாப்வேயில் இந்தியா சுற்றுப்பயணத்தின் போது 23 ஆண்டுகள் மற்றும் 197 நாட்களில் இந்தியாவை வழிநடத்தி சாதனை படைத்துள்ளார்.
Welcome to India's Captaincy Rishabh Pant💙 pic.twitter.com/fg6limCeid
— Ajinkya Darshane (@ajinkyadarshane) June 9, 2022
அதேபோல், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தனது 26 வயதில் டி20 கேப்டனாக அறிமுகமானார் மற்றும் விராட் கோலி 28 வயதில் கேப்டன் பதவியை ஏற்றார்.
கேப்டன் பதவி குறித்து பண்ட் அளித்த பேட்டியில், "இது ஒரு சிறந்த உணர்வு, குறிப்பாக உங்கள் சொந்த ஊரில் கேப்டன் பதவி போன்ற ஒரு வாய்ப்பைப் பெறுவது. அதைவிட பெரியது எதுவுமில்லை. நான் அதை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி 100 சதவீதத்தை வழங்க முயற்சிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்