![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IND vs PAK : பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா..! இணையத்தில் வைரலாகும் சூப்பர் மீம்ஸ்கள்..!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது தொடர்பாக இண்டர்நெட்டில் வைரலாகும் மீம்களின் தொகுப்பு இது.
![IND vs PAK : பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா..! இணையத்தில் வைரலாகும் சூப்பர் மீம்ஸ்கள்..! IND vs PAK T20 World Cup: Best memes as Virat Kohli's epic knock helps India defeat Pakistan viral on Social Media IND vs PAK : பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா..! இணையத்தில் வைரலாகும் சூப்பர் மீம்ஸ்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/23/d8f47b717c04abd8b3e2eb6c713ebb671666539103173333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றைக்கு சிறப்பு தீபாவளி பரிசு கிடைத்தது. ஆமாம். டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா கடைசி ஓவரில் திரில் வெற்றியை பதிவு செய்தனர். பாகிஸ்தான் - இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆட்டம் எப்போதும் பெரிதும் எதிர்பாக்கப்படுவதாக இருக்கும். இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்புடன் அமைந்தது.
மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கிய இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. களத்தில் விராட் கோலி நிதானமாக ஆடினார். ஒ
ஒரு பக்கம் இந்தியா விக்கெட்களை இழந்தாலும், மறுபுறம் வீரர்கள் ரன் சேர்க்க தொடங்கினர். அதிரடியாக ஆகிய விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா அணியின் வெற்றியை கொண்டாடும் விதமாக டிவிட்டரில் பலரும் வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். அதே வேளையில், இன்றைக்கு இந்திய அணியின் நிலமை என்னாக போகிறதோ என்றிருந்த சூழலில், திடீரென ஆட்டத்தின் போக்கே மாறிபோனது. இதனை வைத்து பல மீம்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Zomato டிவீட்:
அன்புள்ள பாகிஸ்தான், தோல்வியை ஆர்டர் செய்திருந்தீர்களா? இதோ உங்களுக்காக விராட்! என்று குறிப்பிட்டு விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தை பாரட்டியும், பாகிஸ்தான் தோல்வியை சுட்டுக்காட்டியும் கமெண்ட் செய்துள்ளனர்.
dear pakistan, ordered a defeat?
— zomato (@zomato) October 23, 2022
virat your service
அவென்சர்ஸ் எண்ட் கேமில் வரும் தானோஸ் படத்தை வைத்தும் மீம்களை வைரல் ஆகி வருகின்றன. இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்றிருந்த நிலையில், கடைசி ஓவரில் பாகிஸ்தான் பவுலர்கள் நோ பால், வைட் ஆக பந்து வீசினர். இதனை கலாய்த்து மீம்கள் வைரல் ஆகி வருகிறது.
Audience: Who will save the match for us? Kohli? DK? Ashwin?
— Sagar (@sagarcasm) October 23, 2022
Pak bowler: pic.twitter.com/W4qC4mVEad
வைரல் ஆகும் மீம்கள்:
Special message to all Pakistan fans 😘😘😘
— Dr Gill (@ikpsgill1) October 23, 2022
pic.twitter.com/VJHx7AMHIn
தீபாவளி வாழ்த்து:
கிரிக்கெட் ரசிகர்களுக்கு உண்மையான தீபாவளி இது.
Indians celebrating Diwali pic.twitter.com/drPDRro4PI
— Sagar (@sagarcasm) October 23, 2022
விராட் கோலி ஆட்டத்தினை மாற்றிய தருணம்:
How Virat Kohli changed gears to win this match: pic.twitter.com/0vu24fEK2j
— Pakchikpak Raja Babu (@HaramiParindey) October 23, 2022
இந்தியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Every Indian to #ViratKohli𓃵 Right Now
— Devangbajpai07 (@devangbajpai17) October 23, 2022
He is the King 👑 #TeamIndia #RohitSharma𓃵 #IndvPak #IndvsPak #ViratKohli𓃵 pic.twitter.com/Kw3VUnQ1mI
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)