Watch Video: அறிமுக வீரராக ஸ்ரேயாஸ்.. தொப்பியை வைத்து கவாஸ்கர் செய்த சம்பவம்: வைரல் வீடியோ உள்ளே
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி மூலம் இந்திய அணியில் அறிமுக வீரராக ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கி உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூர் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்திய கேப்டன் ரஹானே டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். டாஸ் வென்ற வீடியோவை கீழே காணலாம்.
#TeamIndia Captain @ajinkyarahane88 wins the toss and elects to bat first in the 1st Test against New Zealand.
— BCCI (@BCCI) November 25, 2021
Live - https://t.co/9kh8Df6cv9 #INDvNZ @Paytm pic.twitter.com/1T4NOXNED7
டாஸ் டென்ற இந்திய அணியின் முதல் இன்னிங்கை தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வாலும், சுப்மன்கில் ஜோடி தொடங்கியுள்ளது. இந்த போட்டி மூலமாக இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் அறிமுக வீீரராக களமிறங்குகிறார். அவருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில்கவாஸ்கர் இந்திய அணியின் தொப்பியை அளித்து, இந்திய டெஸ்ட் அணிக்கு வரவேற்றார். இந்த வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
🎥 A moment to cherish for @ShreyasIyer15 as he receives his #TeamIndia Test cap from Sunil Gavaskar - one of the best to have ever graced the game. 👏 👏#INDvNZ @Paytm pic.twitter.com/kPwVKNOkfu
— BCCI (@BCCI) November 25, 2021
டெஸ்ட் வீரராக களமிறங்கி உள்ள ஸ்ரேயாஸ் அய்யருக்கு பலரும் வாழ்த்த தெரிவித்து வருகின்றனர். அதேபோல, இந்திய வீரர்கள் இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக பேருந்தில் இருந்து இறங்கி உள்ளே செல்லும் வீடியோவையும் பி.சி.சி.ஐ. தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவையும் கீழே காணலாம்.
Hello & good morning from Kanpur for Day 1 of the first #INDvNZ Test! ☀️ 👋#TeamIndia @Paytm pic.twitter.com/Bz8pr0EDuh
— BCCI (@BCCI) November 25, 2021
கான்பூர் கிரீன்பார்க் மைதானத்திற்குள் செல்லும் முன் இந்திய வீரர்கள் தங்களது செல்போன்களை அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரியிடம் ஒப்படைக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்