(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs NZ 1st Test: காற்றில் சென்ற பந்து! மின்னல் வேகத்தில் ஒற்றை கையால் பிடித்த கான்வே - சர்பராஸ் சோகம்
சர்பராஸ்கான் அடித்த பந்தை மின்னல் வேகத்தில் பாய்ந்து ஒற்றைக் கையால் நியூசிலாந்து வீரர் கான்வே கேட்ச் பிடித்து அசத்தினார்.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் நேற்று தொடங்கியது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று ஆட்டம் தொடங்கியது.
டக் அவுட்டான சர்பராஸ்கான்:
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது. மழையால் ஆட்டம் சிறிது நேரம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். பின்னர், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்ற ரோகித் சர்மாவின் கணிப்பு தவறானது.
ஆட்டத்தை தொடங்கிய ரோகித்சர்மா- ஜெய்ஸ்வால் நிதானமாகவே ஆடத் தொடங்கினார். ஆனால், நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் வில்லியம் ஓரோர்கி, மேனட் ஹென்றி இந்தியாவை நிலைகுலையச் செய்தனர். ரோகித் சர்மா 2 ரன்னிலும், விராட் கோலி டக் அவுட்டாகியும் வெளியேறிய நிலையில் இளம் வீரர் சர்பராஸ் கான் 3வது விக்கெட்டிற்கு களமிறங்கினார்.
பாய்ந்து பிடித்த கான்வே:
Conway's leap of faith 🤯☝️#TeamIndia lose their 3rd wicket early on in Bengaluru! #INDvNZ #IDFCFirstBankTestTrophy #JioCinemaSports pic.twitter.com/gM3dSzIgKn
— JioCinema (@JioCinema) October 17, 2024
மேட் ஹென்றி வீசிய பந்தை பவுண்டரிக்கு அவர் அடிக்க முயல பந்து பேட்டில் சரியாக படாமல் சென்றது. சில்லி மிட் ஆஃப் திசையில் நின்ற கான்வே அபாரமாக பாய்ந்து ஒற்றைக் கையால் கேட்ச் பிடித்தார். கான்வே பிடித்த இந்த அபார கேட்ச்சால் சர்பராஸ்கான் டக் அவுட்டானார்.
இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, கே.எல்.ராகுல், ஜடேஜா, அஸ்வின், சர்ப்ராஸ் கான் டக் அவுட்டாகினார். இந்திய அணி கடந்த சில ஆண்டுகளில் ஆடிய இன்னிங்ஸ்களிலே இந்த இன்னிங்ஸ் மிக மிக மோசமான இன்னிங்சாக பதிவாகியுள்ளது.