Ind vs NZ- 1st T20, Full Match Highlight: ரோஹித் - டிராவிட் கூட்டணிக்கு முதல் வெற்றி! கடைசி ஓவரில் த்ரில் வெற்றி
சர்வதேச டி20 கிரிக்கெட்டின் அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே பவுண்டரி விளாசிய வெங்கடேஷ, அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
![Ind vs NZ- 1st T20, Full Match Highlight: ரோஹித் - டிராவிட் கூட்டணிக்கு முதல் வெற்றி! கடைசி ஓவரில் த்ரில் வெற்றி Ind vs NZ, 1st T20: India won the match by 5 wickets against New Zealand in first T20 Match at Sawai Mansingh Indoor Stadium Ind vs NZ- 1st T20, Full Match Highlight: ரோஹித் - டிராவிட் கூட்டணிக்கு முதல் வெற்றி! கடைசி ஓவரில் த்ரில் வெற்றி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/17/2e86f7e62e808482752074a328cb72d2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இன்று முதல் டி20 போட்டி ஜெய்பூரில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் ஷர்மா, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதனால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 164 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணிக்காக மார்டின் குப்தில், டேரில் மிட்சல் களமிறங்கினர். முதல் இன்னிங்ஸில், இந்தியாவுக்காக புவனேஷ்வர் குமார் முதல் ஓவரை வீசினார். இவர் வீசிய மூன்றாவது பந்திலேயே விக்கெட் சரிந்தது. டி20 உலகக்கோப்பை அரை இறுதிப்போட்டியில் அதிரடியாக ஆடிய டேரில் மிட்சல், புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் க்ளீக் பவுல்டாகி டக்-அவுட்டானார்.
ஆனால், அதிரடியாக தொடங்கிய இந்திய அணிக்கு நியூசிலாந்து அணி 100 ரன்களை கடக்கும் வரை விக்கெட்டுகள் விழவில்லை. ஒன் டவுன் களமிறங்கி இருந்த சாப்மேன், அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அவருடன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஓப்பனர் குப்திலும் அரை சதம் கடந்து அசத்தினார்.
தனது கடைசி ஓவரை வீச வந்த அஷ்வினுக்கு, ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் கிடைத்தது. போட்டியின் 14வது ஓவரில்தான் இந்திய அணி இரண்டாவது, மூன்றாவது விக்கெட்டுகளை வீழ்த்தியது. சாப்மேன், ஃபிலிப்ஸ் ஆகியோர் அஷ்வினின் சுழலில் சிக்கி பெவிலியன் திரும்பினர்.
அதனை அடுத்து, ரன் ரேட் குறையும் என்ற எதிர்ப்பார்த்த நிலையில், கடைசி 5 ஓவர்களில் முடிந்த வரை ரன் சேர்த்துள்ளது நியூசிலாந்து அணி. தீபக் சஹார் பந்துவீச்சில் குப்தில் விக்கெட்டும், புவனேஷ்வர் பந்துவீச்சில் டிம் சைஃபெர்ட்டும் ஆட்டம் இழந்தனர். கடைசி ஓவரை சிராஜ் வீசினார். அப்போது பேட்டர் அடித்த பந்தை முற்பட்டபோது கையில் பட்டு காயமானது. இதனால் சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால், அதே ஓவரில் மீண்டு வந்த சிராக், இந்திய அணிக்கு 6வது விக்கெட்டை பெற்று தந்தார். ரஷின் ரவீந்திரா அவுட்டாகி வெளியேறினார். இதனால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 164 ரன்கள் எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸில், ஓப்பனிங் களமிறங்கிய ராகுல், ரோஹித் இணை அதிரடியாக தொடங்கியது. 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் எட்டியிருந்த நிலையில், சாண்ட்னர் பந்துவீச்சில் ராகுல் அவுட்டாகினார். அவரை அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், அதிரடியாக பேட்டிங் செய்தார். கேப்டன் ரோஹித் ஷர்மா அரை சதம் கடப்பார் என எதிர்ப்பார்த்திருந்த நிலையில், 48 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்தார். இன்னொரு புறம் சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்ட, 3 சிக்சர், 6 பவுண்டரிகள் விளாசிய அவர், 40 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து இந்திய அணி இலக்கை நெருங்க முக்கிய பங்காற்றினார்.
ஆனால், கடைசி வரை பரபரப்பாக சென்ற இந்திய அணியின் சேஸிங், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. சர்வதேச டி20 கிரிக்கெட்டின் அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே பவுண்டரி விளாசிய வெங்கடேஷ, அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சூப்பர் ஓவர் போகுமா என நினைத்த நிலையில், கடைசியில் பண்ட் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதிப்படுத்தினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)